பின்பற்றுவதற்கு சிறந்த சில காலைப் பழக்கங்கள்

0
877

 • வழக்கமாய் எழுவதை விட ஒரு கால் மணி நேரம் முன்னர் எழுந்து விடுதல் நல்ல மாற்றத்தை தரும். கூடுதல் நேரம் இருப்பது போலத் தோன்றும்.
 • எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் தலையணை, போர்வை , படுக்கையை ஒழுங்கு படுத்துவது ஒரு தனி மனிதனாக உங்களின் ஒழுக்கத்தினை காட்டும்.

 • மூச்சு பயிற்சி செய்வது சிறந்தது.அதற்கெல்லாம் தனிப்பட்ட நேரம் இல்லை என நினைக்கிறீர்களா? எப்படியும் நடக்கும் போது, பஸ்ஸில் பயணிக்கும் போது என ஒரு பத்து நிமிஷம் கிடைக்காதா. அதுவே போதும்.

 • காலையில் எழுந்ததும் அடுத்த நொடியே மொபைலை நோண்டுவதோ டீவியில் மூழ்குவதோ சிறந்ததல்ல. கண்கள் ஓய்வு எடுத்து அப்போதுதான் கொஞ்சம் ரெடி ஆயிருக்கும். உடனே அதுக்கு வேலை கொடுக்கக் கூடாது.

 • விடுமுறை நாட்களில் எந்தவித பரபரப்புமில்லாமல் அமைதியாக எழலாம். அப்போது நம்மை சுற்றி இருக்கும் இடத்தின் மீது அக்கறை எடுப்பது அவசியம். சுத்தமில்லாத இடம் உங்கள் மனதில் வீணான அழுத்தத்தை தோற்றுவிக்கும்.

 • குளிப்பதற்கு எப்போதுமே குளிர்ந்த நீரையே பயன்படுத்துவது சிறந்தது. அது எவ்வளவு குளிராக இருந்தாலும் பரவாயில்லை. அடிக்கடி சளி பிடித்துக்கொள்பவர்கள் மட்டும் வெந்நீரில் குளிப்பதுதான் சிறந்தது என்று நினைத்தால் வெந்நீரில் குளியுங்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ந்த நீரை பயன்படுத்த முயற்சி செய்யவும். உடல் அலைச்சல் இருக்கும் நாட்களில் மட்டும் வெந்நீர் பயன்படுத்தவும்.குளிர்ந்த நீரில் குளிப்பதால் அந்த நாள் முழுவதும் உங்களால் சுறு சுறுப்பாக இருக்க முடியும்.

 • ஒரு நல்ல புத்தகத்தை மூன்று பக்கமாவது காலையில் படியுங்கள். தினமும் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள் சிறிது நேரம் ஒதுக்கி காலையிலேயே வாசியுங்கள். அது அன்றைய தினத்தின் உற்சாகத்தை சில மடங்குகளில் அதிகரிக்கும்.

 • ஒருபோதும் உங்கள் காலை உணவை தவிர்க்காதீர்கள்.முன்னைய நாளின் இரவு உணவு வயிற்றில் இருக்குமென்று நினைத்து காலை உணவை தவிர்க்க வேண்டாம்.
 • காலை வேலைகள் முடிந்து வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டில் உள்ள அனைத்து மின் உபகரணங்களையும் அணைத்து விட்டு செல்ல மறக்க கூடாது.

 • முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை காலையில் ஒரு நாளும் அவசர அவசரமாக செய்யக் கூடாது.
 • எதுவித பதற்றமுமின்றி உற்சாகத்துடன் ஒரு புதிய நாளை தொடங்குகின்றோம் என்ற மன நிறைவுடன் அந்த நாளை வரவேற்பது போல் தயாராக வேண்டும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க