பாரதி

0
1212

பார் போற்றிட
பாரதம் ஈன்றெடுத்த
பாட்டுடை தலைவன் நீ..!
சாதி துண்டாடிய
சமூகத்தின் சகதியில்
வேதங்கள் துறந்து
வேற்றுமை களைந்தெறிய
செந்தமிழ் சுனையாய் மலர்ந்த
செந்தாமரை நீ…!
பெண்ணை பேதையாய் பேச
பெண்ணுரிமை பேசியவன் நீ..!
முத்தமிழ் புலமை மிஞ்சிய
முண்டாசு கவிஞன் நீ..!
கவியாயிரம் வடித்த
கவிதைகளின் காவலன் நீ..!
அறம் பெரும் தமிழ் மீதிலே
அத்தனை அருகல் உனக்கு..!
உன் கண்ணம்மாவிலோ
உயிரை ஊடுருவிடும் காதல் எனக்கு..!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க