செய்முறை:
நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டவும்,பாதங்கள் இணைந்து இருக்கட்டும்.முன்னாள் குனிந்து கைகளால் உள்ளங்கால்களை தொடவும்.கழுத்துக்கு கீழ் உள்ள உள்ள பகுதிகளை மடக்கி, தலையால் முழங்கால்களை தொடவும்.கைகளை மெதுவாக எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி,உடம்பையும் நேராக வைக்கவும்.
மூச்சின் கவனம்
குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்
உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல், கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது.
