பலி ஆடு

1
3020

 

 

 

 

அவ்வப்போது குளிப்பாட்டி
அருகம்புல் தீனி போட்டு அழகாய் என்னை வளர்த்தாய்….

உயரே இருக்கும்
கிளைகளை வளைத்து
கொடுத்து
தழை தின்ன வைத்து
தலை கூட நீவி விட்டாய்…

என் மீது யாரேனும்
கல்லெறிந்தால் காயம்
பட்டது போல
கத்தியவன் நீ!

நீ உண்ட பருக்கைகள்
அதை உண்டதால் விழுந்த
புழுக்கைகள்…
நீ அள்ளியதைப்பார்த்து
சிலநேரம் நானே பாச கண்ணீர் சொறிந்திருக்கிறேன்…

என் கயிற்றை
அவிழ்த்து விட்டு நீ
கண்ணயர்ந்த நேரம்
கூட உன் வீட்டு
தாழ்வாரமே
கதி என்று விரைந்தேன்…

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தில் ஆட்டு பொங்கல் கொண்டாடி
என்னை மகிழ வைத்தவன் நீ

உன்னை ம்மாஆஆ… என்று அழைக்க
முடியாமல்
மேமே என்று அழைத்து
குழைந்தேன்…

வாடிவாசல் காணாத ஏக்கத்தை
உன்னோடு
வாஞ்சையோடு விளையாடி
தீர்த்துக் கொண்டேன்…

உன் கையிலிருக்கும் கத்தியைக் கூட நீ ஏதும் இலை தழை
வெட்டுவதற்கு வைத்திருக்கிறாய்
என்று தான் நான்
நினைத்தேன்…

நீ கிளை நோக்கி உயர்த்திய கத்தி என் தலை நோக்கி வரும் பொழுது தான் உணர்கிறேன்
நானும் ஒரு பலியாடு என்பதனை….

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb bro.