பயணம் தொடரும்…

0
1779

மற்றவங்க என்ன பற்றி எப்பிடி பேசுறாங்கனு எல்லாம் நான் கவலை படுறது இல்ல. நிறைய பேர் நிறைய மாதிரி பேசுறாங்க.நான் இரக்கம் இல்லாதவன் என்று சொல்றாங்க.என்ன பார்த்து பயப்படுராங்க. ஆனால் நான் உண்மையிலேயே ரொம்ப நல்லவன். நான் என்னோட வேலை மட்டும் தான் செய்றன்.இங்க இருக்க மனிதாபிமனம்,அன்பு இல்லாத சடங்கள விட நான் எவளவோ மேல்.மற்ற நாளைல எல்லாம் எனக்கு நிறைய இடத்துல வேலை இருக்கும்.ஆனால் இன்னைக்கு தீபாவளி என்றதால எனக்கு இரண்டு இடத்துல தான் வேலை. எனக்கு நிறைய வேலை இருந்தா தான் ரொம்ப பிடிக்கும். so இன்னைக்கு ரொம்ப boreஆ தான் போகும்னு நினைச்சிட்டு என்னோட வண்டிய start பண்ணிட்டு ready ஆனேன்.என்னோட ultra technological display ah touch பண்ணன். இன்னைக்கு நான் பண்ண வேண்டிய இரண்டு வேலைட details உம் display ல வந்துச்சு. அத பார்த்தவுடனே எனக்கு ரொம்ப ஆச்சரியம். 

பொதுவா எங்க agents ல ஒரே timeல இரண்டு வேல செய்யுறதுனா , ஒவ்வொரு area க்கும் வேற வேற employers ah எங்க boss அனுப்புவாரு.நாங்களும் கஸ்டம் இல்லாம வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு jolly ah கிளம்பிடுவொம்.ஆனால் இன்னைக்கு ஒரே time ல நான் இரண்டு வேலைய செய்யனும்.ஒரு வேளை system ல எதும் problem இருக்குமா? அதுக்கு chance ஏ கிடையாது.ஏன்னா எங்களோட system update பண்ணுறவரு ரொம்ப பெரிய மூளைக்காரரு. இருக்கட்டும் என்னால இது முடியும்னு நினைச்சிட்டு அந்த details ல இருந்த முதல் address க்கு போனேன்.எப்பயுமே நான் road ல இருக்க signals , traffic police க்கு எல்லாம் நின்னுக்குறதே கிடையாது. but இன்னைக்கு எனக்கு வேலை குறைவு என்றதால மத்தவங்கள போல விதிகளை கடைபிடிப்போம்னு நின்னேன்.

அப்போ நான் தேடி போன அந்த addressட சொந்தகாரர். signal க்காக wait பண்ணிட்டு இருந்தாரு .

So அவர  follow பண்னிட்டு போனா வேலை easy ah முடிஞ்சிடும்னு அவரு பின்னுக்கே போக ஆரம்பிச்சேன். அது வரைக்கும் அவரு யாருனு எல்லாம் தெரியாது.அவர்ட வண்டி ஒரு film shooting spot க்கு போனிச்சு .அவர பார்த்தவுடனே அங்க இருந்த எல்லோரும் “ம்ம்! Hero வந்துட்டாரு. Hero வந்துட்டாரு”னு அவங்க அவங்கட work எல்லாம் quick ah செய்ய ஆரம்பிச்சாங்க!  அவரு கார விட்டு கீழ இறங்கி அங்க நின்னுட்டு இருந்த ஒரு bus மாதிரி வாகனத்துல ஏறி costume எலாம் மாத்திட்டு shooting spot க்கு போனாரு. அங்க இருந்த ஒருத்தர் அவருக்கு paper பார்த்து இன்னைக்கு இதுதான் scene னு சொல்லிட்டு இருந்தாரு.

Hero வும் நிறைய cameras முன்னாடி போய் நின்னுட்டு “ஓகேவா சார்?”னு கேக்கிறார். அங்க இருந்த stunt master , technical workers எல்லாம் hero மேல நிறைய cables எல்லாம் மாட்டுராங்க.எல்லாம் சரியான பிறகு , hero முன்னாடி ஒருத்தன் போய் நின்னுட்டு இருக்காரு.

Camera rolling
Action
என்று ஒரு சத்தம் camera முன்னாடி க்ளாப்ஸ் அடிச்சிட்டு ஒருத்தன் விலகுறான்.

Hero 5M jump பண்ணிட்டு முன்னுக்கு நின்னுட்டு இருக்கவனுக்கு ஒரு அடி அடிக்கிறாரு…ப்பா! என்ன அடி! அவன் பக்கத்துல இருந்த building ah உடைச்சிக்கிட்டு அடுத்த building கண்ணாடிய உடைச்சிட்டு போய் விழுராரு.உடனே hero camera வ பார்த்து ” என் கண்ணு முன்னாடி பெண்களுக்கு எதிரா எவனாச்சும் எதாவது பண்ணான்! இந்த solar லயே இருக்க முடியாது! ஏன்னா என் பேரு solar star!”

ப்பா!  உடனே எல்லோரும் கைதட்டி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க!
WoW ! Amazing sir! Aliens level acting ! இந்த பில்ம் இன்டஸ்ட்ரில (film industry) உங்கள அடிச்சிக்க ஆக்களே இல்ல! Solar star ! Solar star தான்!

“இவர போய் தப்பா நினைச்சிட்டமே! பெண்களுக்காக எவளோ சப்போட் பண்றாரு.”னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டன்.
அதுக்கு அப்றமா ஒரு 20 , 30 பேர அடிச்சி தாறுமாறு பண்ணி முடிச்சிட்டாரு!
அதோட அந்த நாள் ஷுட்டிங் முடிஞ்சு!

அவரு shooting முடிஞ்சு நேரா ஒரு hospital போனாரு.அங்க அவர்ட மனைவி பிரசவத்துக்காக அணுமதிக்கப்ப்
ட்டு இருந்தாங்க! Hero உள்ள போய் அவங்க பக்கத்துல போய் இருந்தாரு. அவரு உள்ள போனதுக்கு அப்றம் உள்ள இருந்த relatives எல்லோரும் வெளில போய்ட்டாங்க . அவரு அவங்கட மனைவிகிட்ட ” போன இரண்டு தடவை மாதிரி இந்த முறையும் பெண் குழந்தை பிறந்திச்சோ , இந்த தடவையும் அத கொல்ல சொல்லிடுவன்! நீ ஒன்னும் பயப்படாத உன்ன ஒன்னும் பண்ணமாட்டன். உனக்கு எதும் ஆச்சுனா வெளில என்ன நிறைய கேள்வி கேப்பாங்க.”

Hero வெளில வந்து உடனே car ஏறி  போய்ட்டான்.

Oh ! இத பார்த்து நான் என் வந்த வேலைய மறந்துட்டன்.நான் தான் சொன்னன்ல நான் ஒரு agent என்று. இந்த உலகத்துல யார் யாருக்கு வாழ்நாள் முடியுதோ அவங்கள இன்னுமொரு உலகத்துக்கு அனுப்புற agent!  எங்களுக்கு ஒரு boss இருக்கார்.அவருக்கு எமன், காலன் னு நிறைய பேர் இருக்கு. இப்போ இந்த உலகம் ரொம்ப speed ஆகிருச்சு. So எல்லா வேலைக்கும் boss வரமாட்டாரு! பூகம்பம் , சூறாவளி, Tசுனாமி இப்பிடி பெரிய வேலைகளுக்கு தான் வருவாரு.

இப்போ நான் வந்த வேலை பிறக்க போற குழந்தையும் , தாயையும் கொல்லனும்  . எங்க எங்க பெண்களுக்கான வன்முறைகளும் , அடக்குமுறையும் அதிகரிச்சிட்டு போகுதோ அங்க எல்லாம் எங்க boss ட வருகை சீக்கிரமா வரும்.
என் வேலை ய மறந்துட்டு ஒரு சாதரணமான ஒருத்தனா நான் யோசிக்கும் போது நான் செய்ய போறது எவளோ பெரிய தப்பு.

நான் ஒரு நிமிசம் யோசிச்சன். நான் செய்ய போறது சரிதான்.இரண்டு பேர அனுப்பனும். அந்த தாய் குழந்தை பிறக்கும் போது இறக்குறது விதி.அந்த பெண் குழந்தை இறக்கனுமா!

நான் செய்றது சரிதான் . அந்த தாய் இறந்திட்டாங்க.

பெண் குழந்தை பிறந்திருக்கு.
அத அந்த hero க்கு சொல்ல அவங்க relatives call பண்றாங்க.

Call answer பண்ணல.

இது ஒன்னும் புதுசு இல்ல .எங்க boss கூட ஒரு காலத்துல ஒரு பையன கூட்டிட்டு வர போய் வெறும் கையோட திரும்புனாரு ரொம்ப காலத்துக்கு முதல்.

நானும் அத தான் செய்றன். இன்னைக்கு தீபாவளி . நரகாசூரனு ஒருத்தன கொலை செஞ்ச நாள். நானும் அத தான் செஞ்சன்.

இரண்டு பெண் குழந்தைய கொன்ன ஒருத்தன. நான் செஞ்ச வேலைக்கு எனக்கு அங்க suspension letter ready ஆகிட்டு இருக்கும். It’s okay. எனக்கும் மனசாட்சி இருக்கு.

திரும்பி போய்ட்டு இருந்தன் என்னோட தலதீபாவளிய கொண்டாட. பாவம் இல்லாத வேலைய செஞ்சிட்டு….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க