நேசத்தின் கதவடைப்பு

0
192


அன்பே,
ஒரு நேசத்தின்
கதவடைப்பு என்பது என்ன?
எதுவும் சொல்லாத போதே
மென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்
ஒரு நிந்தனைக்கு
முகம் கொடுக்க முடியாமல்
தலை கவிழ்ந்து கொள்கிறோம்
எதற்கு தவிக்க விடுகிறாய்
என கேட்க முடியாமல்
இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்
நம் அனுபவப் பாடங்களை
பிறருக்கு சொல்லாமலே போகிறோம்
எல்லாவற்றையும் மறந்தபடி
புன்னகைத்து கை குலுக்குகிறோம்
வாசற்கதவின் தாழ் திறந்து
கட்டியணைத்து பிரிகிறோம்
உதடு பிரிக்காமல்
புன்னகைத்துக்கொள்கிறோம்
எச்சில்படாமலே
முத்தங்களை பரிமாறிக்கொள்கிறோம்
யாரும் அறிந்து விடக் கூடாதென
அவசர அவசரமாய்
நம் நேசக்கதவை
நாமே அடைத்து விடுகிறோம்
அப்போதெல்லாம்
சொல்லித்தீர்க்க முடியாதென தெரிந்தும்
ஒரு துயரத்தின் ஆற்றாமையை
நமக்குள்ளே புதைத்து விட்டு
நடப்பது நடக்கட்டும் என
நகர்ந்தும் விடுகிறோம்

இங்கே கருத்துக்களை பதிவிடவும்

avatar
  இங்கே பதிவு செய்க  
என் கருத்துக்கு