நீ….

0
1256

என்
ஒட்டு மொத்த கற்பனைகளின்
தலைகீழ்ப் படுத்தல்களாய்
நான்
தரிசித்த அனுபவங்களில்
உன் நேசமும் ஒன்று

அர்த்தமில்லா
கண்ணீர்த் துளிகள்

காரணமில்லா
புன்னகைகள்

இடைவெளி இல்லா
பேச்சுக்களில்
இடையில் வரும்
செல்லச் சண்டைகள்

இறுதியில்

சமாதானம் செய்யும் நீ
சிரித்துக் கொண்டே
உன்
கோபம் சீண்டும் நான்

இரவைப் போலவே
நீளும்
நம் காதல்..

உணர்வுகள்
ஒதுக்கி விட்டு
என் துன்பங்களின் போது
தலை கோதும்
உன்
பல நேரத் தோழமை

எப்போதும்
என் குழந்தையாய் நீ
உன்
அன்னையாய் நான்


ஆனாலும்
எப்போதும் நினைவிலிருக்கும்
என் பெயரைப் போலவே
என்னோடு
கலந்திட்ட பிரியா
சேர்க்கையாய்
உன் நினைவுகள்

இனியும்
என்ன சொல்ல
இதயமென்றா
அதில்
உள்ளூறும் துடிப்பென்றா

வேண்டாம்

வார்த்தைகளின் ஜோடனைகளில்
வாழ்வதில்லை காதல்

இருந்தும்
சுருங்கச் சொல்கிறேன்
என் மேல் நீயும்
உன் மேல் நானும்
கொண்டிருக்கும் ப்ரியங்கள்

என் கணவா,

இன்னும்
வரிக்கு வரா நல்
கவிதை போன்றது…….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க