நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி!!

0
836

 

 

 

 

 

 

சிறந்த வாசகரை கண்டு கொள்வோம்…!!!

நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி ஆரம்பித்துவிட்டது.

வாசகர்களே உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நீர்மை வலைத்தளம் அமைக்கும் களம் இது.

இதுவரை எழுத்தாளர்களுக்கான பல்வேறு போட்டிகளை நீர்மை வலைத்தளம் நடாத்தி வருவது யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் முதன்முதலாக நாங்கள் வாசகர்களை கௌரவிக்க உள்ளோம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

  • நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் படைப்புக்களுக்கு உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை எழுத்தாளர்களின் படைப்புகளின் கீழே பதிவு செய்யுங்கள்.
    சாதக பாதக கருத்துக்கள் இரண்டையும் வரவேற்கின்றோம். அதுவே ஓர் ஆரோக்கியமான விடயமாக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என நம்புகின்றோம்.
  • போட்டியில் எந்த நாட்டவரும் எந்த வயதுப்பிரிவினரும் பங்குபற்றலாம்.
  • வெற்றி பெறும் வாசகர் விபரம் நீர்மை வலைத்தளத்தில் மார்ச் மாதம் 07ம் திகதி மாலை அறிவிக்கப்படும். வாசகரை நீர்மை வலைத்தளம் தொடர்புகொண்டு பரிசுகளை வழங்குவது தொடர்பில் தெரிவிக்க வேண்டியிருப்பதால் இப்போட்டியில் பங்கெடுக்கும் முதல் நாளே வாசகர்கள் கீழ்வரும் விபரங்களை பூர்த்தி செய்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு [email protected] அல்லது எமது வாட்சப் இலக்கத்திற்கு +94762660466 கீழ்வரும் விபரங்களுடன் சிறந்த வாசகர் 2021 என கண்டிப்பாக தலைப்பிட்டு அனுப்பி வைத்தல் வேண்டும். ஒரு தடவை மாத்திரம் அனுப்பினால் போதுமானது.

 

 

 

 

 

 

சிறந்த வாசகர் 2021

பெயர் :
மின்னஞ்சல் முகவரி :
தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம்:மின்னஞ்சல் முகவரி :
தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம்:
கருத்துப் பகிரும் போது கமான்ட்டில் காட்சிப்படுத்தப்படும் உங்கள் பெயர் :
போட்டிக்காக கருத்துத் தெரிவித்த முதல் படைப்பு :
போட்டிக்காக கருத்துத் தெரிவித்த முதல் படைப்பு :

  • புதிய வாசகர்கள் எவ்வாறு படைப்புகளுக்கு கருத்துக்களை பகிர்வது என தெளிவாக அறிய விரும்பினால் இந்த இணைப்பில் https://bit.ly/2J6mjER சென்று பார்வையிட முடியும்

இப்போதே நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டியில் இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். நீர்மை வலைத்தளத்தில் கணக்கு உள்ள எழுத்தாளர்கள் இப்போட்டியில் பங்குகொள்ள விரும்பினால் பிற எழுத்தாளர்களின் படைப்புகளிற்கு உங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

போட்டியாளர் தேர்வு செய்யப்படும் முறை

இந்தப்போட்டியானது இன்று முதல் பெப்பிரவரி மாதம் வரை நடைபெறும். இந்த இரண்டு மாதங்களிலும் அதிக கருத்துக்களை பகிரும் வாசகரை நாம் அடையாளம் காணுவோம்.

  • அவர் புதிய படைப்புகளுக்கு தனது கருத்துக்களை பகிர வேண்டும்.
  • பிறர் கருத்துப் பகிர்ந்தாலும் அந்தக் கருத்துக்களை பின்தொடர்ந்து கருத்துக்களையும் படைப்பினையும் ஒப்பிட்டு சாதக பாதகங்களை கூறும் வாசகராக இருத்தல் வேண்டும்.

இவ்வாறே சிறந்த வாசிப்பனுபவமுள்ள எமது நீர்மை வலைத்தளத்தின் வாசகரை அடையாளம் காணுவோம்.

வெற்றி பெறும் போட்டியாளர் நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசிப்பனுவமுள்ள வாசகர் என தகைமை பெறுவதோடு அவருக்கான சிறப்பு பரிசுகளும் நீர்மை வலைத்தளத்தினால் வழங்கப்படும்.இப்போதே உங்கள் பயணத்தினை வாசிப்பனுபவத்தை நீர்மை வலைத்தளத்தில் பகிர்ந்திடுங்கள்.

 

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க