நீயே என் முதற் குழந்தை…..

0
1697

பாதித் தூக்கத்தில்
சினுங்கும் போதும்
முடியாத வேளைதனில்
என்மடி தேடும் போதும்
சிறு குறும்பு
நீ புரிந்து
என்முகம் பார்த்து
சிறு புன்னகை
பூக்கும் போதும்
என் தோளின்மீது
உன் தலை சாய்க்கும்போதும்
தூக்கமின்றி புரளுகையில்
தாவி அணைக்கும் போதும்
உணவு உண்ணுகையில்
அடம்பிடித்து மறுக்கும்போதும்
உனக்கு பிடித்தாட்போல்
உடையணிந்து வருகையிலே
என்னை
முத்தமிட்டு கொள்கையிலும்
தலைதுவட்டும் போதினிலே
தட்டிவிட்டு
முகம்பார்த்து
தலையசைக்கும் வேளையிலும்
அழகே உன்னை ரசிக்கிறேன்
புன்முறுவல் பூத்த வண்ணம்

எத்தனை குழந்தை
என் கையில் கிடைத்திடினும்
நான்
கருவில் சுமந்திடாத போதினிலும்
என் அன்பு கணவா
நீயே என் முதற் குழந்தை…….!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க