நீயின்றி நானும் ஒரு அநாதைதான்

0
770

என்னவளே
என்னருகில் நீ சிரித்த
அந்த நிமிடங்களின் நினைவுகள்தான்
என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது

என் மூச்சுக்காற்றை விலைபேசும்
இந்த இதயம் அறியவில்லையே
நுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்
அவள் என்னுள்ளே நுழையக்கூடும்
என்றுதான் என் சுவாசம்
தொடங்குகிறது என்று !!

உன் அருகில் நான் இருந்த
அந்த நிமிடங்கள்தான்
என் உலகில் விலை உயர்ந்தவை
நீயின்றி என் நிழல் கூட
என்னருகில் இன்று இல்லை

வானின்றி நிலவும் வாழ்கின்ற போது
நீயின்றி வாழும் என்னைப்போல்
அதுவும் ஒரு அநாதைதான் !!

 

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க