நிழற்படமானது என் வாழ்க்கை

0
162
FB_IMG_15955983699915237

 

 

 

 

அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி
என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி

தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன்
தேனிலும் விசமுண்டு என்பதையே
உன் விழிகளின் மறுப்பில்தான் உணர்ந்தேன்

என் உமிழ்நீரும் உன்னருகில்
விசமென உருமாறியே என்னுள் நெடுங்காலம்
உயிர் வாழ்கிறது

அன்பே
உன்னைக் காணும் நாழிகையில் மாத்திரம்தான்
என் மனம் மாளிகையில்
வாழ்வதாய் பேரானந்தத்துடன்
பெருமூச்சு விடுகிறது

கடிவாளமாய் உன் நினைவுகள் என்னுள்
உயிர் வாழ்வதால்
குடிபோதையில் நான் வரைந்த நிழற்படமானது என் வாழ்க்கை !!

 

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க