நிர்ப்பந்தம்

0
1171

தொலைதூர நடைபயணம்
தொடர்ந்தே வரும் நிழல்
பாதங்களிடையே சிக்கி
மிதிப்பட்டு வந்தாலும்
இணைந்தே வர சலிப்பதில்லை..
உறங்காமல் உள்ளமெனும்
ஆழ்கடல் தன்னில் புதையுண்டு
நினைவுகள் எனும் அலைகள்
கரைத்தொடுகையில் அவை
வலிகள் தர மறப்பதில்லை..
என் துடுக்குத்தனங்களும்
என்னை விட்டு தூரம் செல்கையில்
வண்ணம் தீட்டமுடியாத
உடைந்த தூரிகை என்றெழும்
உணர்வை மட்டும் தவிர்க்கமுடியவில்லை..
விடைகள் கிடைக்கப்போவதில்லை
என்றறிந்தும் கிடைத்தாலும்
நான் ஏற்கத்தயாரில்லை..
என்பது புரிந்தும் எதற்கு
என்னை சிலந்திவலை பின்னலினுள்
சிக்கவைக்க எத்தனிக்கும்
நிர்பந்த போராட்டம் தேவையில்லையே..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க