நினைவு நீங்குமா?

0
840

தழும்பாமல் தாழாமல்
மிதமாய் அலைமோதிய என்
மனக் கடலின் ஆழத்தில்
புரையோடிய சலனம் -அவன்
நினைவு நீங்குமா?


தூக்கத்தின் நடுவில்
ஓர் இனிய ஆரம்பத்தின்
கோரமுடிவாய் நடந்தேறிய
சொப்பனத்தின் சிற்பி-அவன்
நினைவு நீங்குமா?

உண்ணும் உணவு திரளையாகி
நடுத்தொண்டையில் நிக்க
செய்வதறியா திகைக்கும்
சேயாக நான்மாற தாயானவன்-அவன்
நினைவு நீங்குமா?


தூக்கமின்றி ஓலமிடும் என்
கோர இரவுகளின் நடுவில்
இனிமையும் இன்மையும்
சூழ வலம்வரும் நாயகன்- அவன்
நினைவு நீங்குமா?

என்றோ ஓர்நாள் என்
கண்ணீரும் கதறல்களும் ஓய்ந்து
நாடி அடங்கி நான் ஓய்ந்திட
அன்றாவது கோரன் – அவன்
நினைவு நீங்குமா?

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க