நலனும் அக்கறைகளும்

0
207

எப்போதும் உங்களிடத்தில்
அன்பிற்கு மண்டியிட்டு நிற்பவர்களிடம்
வெறும் மெழுகுவர்த்திகளை நீட்டாதீர்கள்

ஒரு துயரத்திலிருந்து
மீண்டெழுபவர்களிடம்
அவர்களின் மேனி எங்கும் பரவிக்கிடக்கும்
சாம்பல் புழுதியை பற்றி கேட்காதீர்கள்

அக்கறை என்ற பெயரில் காட்டப்படும்
அன்புத்திமில்களுக்கு
உறவுதான் இருக்க வேண்டுமென
வர்ணம் பூசாதீர்கள்

யாரிடமேனும் தோள் வேண்டுமென்றோ
தோள் தருவேன் என்றோ
நிரந்தரமில்லா வாக்குறுதிகளை
அரசியல்தனமாய் பிரச்சாரம் செய்யாதீர்கள்

மிகப்பெரும் தவிப்புகளையும்
மிக சாதாரணமாய்
கடந்து செல்பவர்களிடமிருந்து
கசந்த பக்கங்களை பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்

நிர்மலமாய் புன்னகைத்துக் கொண்டிருப்பவர்களிடம்
துயரமில்லா மனிதர்கள் என
மறந்தும் சொல்லி விடாதீர்கள்

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க