தோசை

0
1800

பழுங்கல் அரிசி : 300 கிராம்

உளுந்தம்பருப்பு : 75 கிராம்

பச்சரிசி : 75 கிராம்

செய்முறை:

  • ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
  • அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
Dosa
Dosa
  • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
  • தோசைக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
  • புளித்த மாவினை தோசைக் கல்லில் ஊற்றி தாள் போல் தேய்த்து சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும். 
  • அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
  • தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மெல்லிய தோசைகளாக ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும். சுவையான தோசை தயார்.

நன்மைகள்: உடற்சக்திக்கு நமது உடலுக்கு கார்ப்ஸ் அவசியம் தேவைப்படுகிறது தோசையில் இது கிடைக்கிறது. ஆனால், எண்ணெய் மிதக்க தோசை சாப்பிடுவதை மட்டும் தவிர்க்கவும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க