தெய்வங்களே!

1
592
BACDDC41-5524-4A86-927A-7BBB3F403D0E-8b6bab73

நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற

எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை

காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு

வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே!


மோதலின்
பின் காதல் மாற தேவையில்லை என

இருவரின் தீவிர ரசிகனாக தினம் கற்றேனே!

பாதம் வருடும் பாதணியை கழட்டி வீட்டினுள் வந்து

அன்பை பகிர்ந்திட மறக்காத தெய்வங்களே!

நலன் கருதி அவர்கள் விதித்த விதிமுறைகள் சில

விந்தை மிக்க வினோத உலகில் வேண்டியனவே!

பலன் எதிர்பாரா அன்பை வழங்கி என்னை பல

ஜென்ம கடனாளியாக்கிய தெய்வங்களே!

உலகப்போரை விட பெரிய ஒலிப்போர் நிகழும்

சில மணித்துளிகளில் போர் நிகழ்ந்த தடங்கள்,

புலன்களில் தென்படாத மாயம் காட்டித்தந்து

கலங்கள் முழுதும் சேர்ந்துள்ள தெய்வங்களே!!!

அரவணைப்பும் அடியும் கஞ்சமின்றி தந்தருளி

மற்றவரில் நல்லதை எடுத்து,தீயதை விட்டு அன்பை

பரப்பிட மறவாமல் கற்றுத்தந்த என் முன்னேற்ற

படிக்கட்டுகளாக அமைந்துள்ள தெய்வங்களே!

இடர் வரினும் இதழோரம் உங்கள் பெயர்களே!

மரணப்பட்டியலில் முதலிடம் நம்மில் எவரெனினும்

கடந்திடும் காலத்தில் பிறந்திடும் நினைவுகளாக

மனதில் அழியாது குடியிருப்பீர் தெய்வங்களே!

-மது

மேலும் இது போன்ற கவிதைகளை எனது ‘மதுவின் கவிமழை பாகம்-1’புத்தகத்தை வாங்கி வாசித்திடலாம் https://bit.ly/3sfa3DK

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Really nice. Appreciated…