திருமண நாள்

0
77
IMG-20200929-WA0175-42d6c65a

 

 

 

 

திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்….

என்னவனின் கரம் பிடித்து உனக்கானவள் நான் என்றும்….
எனக்கானவன் நீ என்றும்…. சொல்லப் போகும் நாள்….

இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி இன்றிலிருந்து எல்லாம் நீ தான் என்று எண்ணும் நாள்…..

தாய், தந்தை, சகோதரி, உறவினர்கள் எல்லோரையும் விட்டு உன் கைகோர்த்து வரும் நாள்…..

எல்லா நிலையிலும் எனக்காக நீ என்று நினைக்கும் நாள்…..

எனக்குள் உன் உயிரை சுமக்கப் போகும் நாள்…..

நீ கணவனாகவும் நான் உன் மனைவியாகவும் ஓர் உடல் ஈர் உயிராக கலக்கப் போகும் நாள்…..

தாய், தந்தை அரவணைப்பில் வளர்ந்த எனக்கு உன் மார்பில் இடம் தரும் நாள்….

எல்லாம் நீ தான் என்று உன்னை மட்டுமே நம்பி உன்னோடு உறவாடும் நாள்….

உனக்கு உரிமையானவள் நான் என்று சாட்சி கூறும் நாள்….

 

 

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க