தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!

0
620

என் பிஞ்சுக்கால்
உன்
நெஞ்சுக் குழியை
எட்டி உதைக்கும்
போதெல்லாம்
தொட்டணைத்த நேசம் நீ “அம்மா”…!!!

என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே..
என் சுவனத்தின் இருப்பிடமே..
என் பாசத்தின் பெருநிலமே..!!

காணக்கிடைக்கா பொக்கிஷத்தை
கைநழுவி விட்ட துயர்
உறைவிடமாய் மனை முழுதும் நிறைந்திருக்க …
விம்மியழும் மனதிற்கு
வேறெதுவும் ஆறுதலில்லை உன்னைத்தவிர…!!

மறக்கவும் முடியுமா தாயே உனை
மண்ணில் உள்ளவரை
சேயாய் நான் கசிந்துருகி
தாய்மடி சேரக் காத்திருக்கிறேன்….!!!
சுகமாகச் சுமந்தவளே…!!

பெத்தெடுக்க முடியாமல் உனை
தத்தெடுக்க காத்திருக்கேன்
இறைவனிடம் இறைஞ்சுகிறேன்
கொடுப்பானா ஓர் வரத்தை…!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க