தனிமை

0
1987
IMG-20210102-WA0069-43099765

வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால்
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை அதை நாம் புரிந்து கொள்வதுமில்லை….!!!

அருகில் இருந்தும்
போலியாக நடிக்கும்
உறவுகளுடன் இருப்பதை விட
தனிமையில் மட்டும் இருப்பது மேலானது அதுவே நிம்மதி தரும்.

தனிமையின்
வேதனையையும் வலியையும்
உணர்வதற்கு பிரிவு அவசியமில்லை
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
தெரியாத உறவுகள் மட்டுமே போதும்
அதை இலகுவாக உணர வைத்து விடுகிறது.

வலிகளையும்
வேதனைகளையும் தரும்
உறவுகளுடன்
இருப்பதை விட தனிமையில் இருப்பது மன நிம்மதியை
தரும்.

போலியான உறவுகளுடனும்
உணர்வுகளை புரிந்து கொள்ளாத உறவுகளுடனும்
பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட தனிமை
ஒன்றும் அவ்வளவு கொடூரமானது
இல்லை.

தனிமை என்பது தனியாக
இருப்பதில்லை எல்லா உறவுகளும் நம் அருகில்
இருந்தும் நமக்காக யாருமே இல்லை என்றது போல்
உணர்வதே தனிமை தான்…..!!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க