சின்னஞ்சிறு சிட்டு

0
1626

சிறகடித்துப் பறந்த சிட்டொன்று
சிறைப்பட்டுப் போனது இன்றோடு

தாயொன்று இருந்திருந்தால்
தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!!
இல்லை
தங்கச் சிலை போல்
தன்னகத்தே வைத்திருப்பாளோ!!!

தரணியிலே உலாவுகிறாய்
உதவுவோர் யாருமுண்டோ!!
உள்ளங்கை ஏந்தாமல்
உண்டு மகிழ நினைத்தாயோ!!

உள்ளம் குமுறுகிறது
பாறை பனியாய் உறைகிறது
கடைக்கண் பார்வைதான்
பாவி நெஞ்சை நெறுடுகிறது…

தலையிலொரு கட்டு
கையிலொரு தட்டு
கடலையிட்டு
எட்டி நடை போட்டு
தவிக்கி தொரு
சின்னஞ் சிறிய சிட்டு….!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க