சாதமும் நானும்

0
1851

வாங்க மக்களே வாங்க இன்னைக்கும் நாம ஒரு ஸ்டோரி பார்ப்போமா??
என்ன ஸ்டோரின்னு கேக்குரிங்களா??

ஏங்க மக்களே உங்களுக்கு இப்புடி டவுட் எல்லாம் வருது நான் எந்த ஸ்டோரிய சொல்லப்போரன் எல்லாம் என்னோட சொந்தக் கதை சோகக் கதைதான் நம்மட வாழ்க்கைலதான் நாலு நல்லது நடந்தா நாற்பது கெட்டது நடக்குதே……

சரி சரி மொறக்காதிங்க ஸ்ரைட்டா விசயத்துக்கு வாரேன்…..

இன்னைக்கு காலைல நடு ஹோல்ல சோபாலா உக்காந்துட்டு ஒய்யாரமா காலையும் தூக்கி சோபா மேலயே வெச்சிக்கிட்டு……
வெச்சிக்கிட்டு……

சிப்ஸ்ஸு சாப்புட்டுட்டு இருந்தேன்னு நெனச்சீங்களா??
ஹஹா….
அதெல்லாம் இல்லங்க உங்களுக்காக கதை எழுதிட்டு இருந்தேன்….

எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கு மக்காள் என்னதான் என்னோட கான்சென்ரேஷன் போன்ல இருந்தாலும் எ கண்ணுக்கு முன்னுக்கு டீ.வி ஓடிட்டு இருக்கனுங்க…

ஒடனே வடிவேலு வேர்ஷன் மாதிரி டீ.வி எப்புடி ஓடும்னலாம் கேக்கப்படாது
பானு.ஜீ ட சிஷ்யர்களா புத்திசாலித்தனமா டீ.வி ல படம் ஓடுதுன்னு புரிஞ்சிக்கனும்….
புரியுதா??

புரியும் புரியும் நீங்க என்னோட வளர்ப்பாச்சே

இப்புடி நா சின்ஸியரா வேலை பார்த்துட்டு இருந்தப்போ யாரோ வந்து நடு மண்டைல நங்கென்டு கொட்டிட்டாங்க செம்ம வலிங்க மண்டைய தடவிகிட்ட நிமிர்ந்து பார்த்தா…..

எ….அப்பத்தா மக அதாங்க எ…ஆத்தா என்னப் பெத்த மகராசி நின்னுட்டு இருந்தாங்க…..

“அம்மோய் ஏம்மா கொட்டின??

“அடியே ஒன்னு போன் பாரு இல்ல டீ.வி பாரு ரெண்டையும் ஒன்னா பன்னுர கரண்டு பில்லு யாரு கட்டுவா??

“ஏம்மா கிறுக்குத்தனமா கேள்வி கேக்குர அப்பாதா கட்டுவாரு….

“கட்டுவாரு கட்டுவாரு மொதல்ல இந்த நெட்டு கனக்ஷ்ன கட் பன்னனும்…

“அம்மா….லூசாம்மா நீ நெட்ட கட் பன்னினா எப்புடிம்மா நா கத எழுதுர??

“கதையாம் கதை அதெல்லாம் ஆரு டி படிக்குரா??

“அடப்போம்மா எ அரும ஒனக்கு புரியல என்னோட கதைக்கு நிந்தவூர்ல இருந்து கொழும்பு வரைக்கும் ரசிகர் மன்றமே இருக்கு தெரியுமா??

“ஆருடி இவள் கேக்குரவன் கேனயன்னா எலி ஏரோப்லேன் ஓடுமாம் அந்த கதையால்ல இருக்கு இது

“எலி எப்போமா ஏரோப்லேன் ஓடிருக்கு அத பைளட் தானே ஓட்டுவாரு….

சொன்னதும்தான் தாமதங்க ஒடனே எங்கம்மா இடுப்புல கை வெச்சி மொறக்க ஆரம்பிச்சிட்டாங்க….

மொறைக்காதம்மா வடிவேலுட எக்சன பார்த்து சிரிச்சி பழகின உனக்கு எஸ்.கே ரேன்ஜ்க்கு நா பன்ர ஜோக் எல்லாம் கேவலமாத்தான் இருக்கும்…..

சரி சரி மொறச்சி மொறச்சி பார்வையாலயே எரிச்சிடாத என்ன விசயம்ன்னு சொல்லு…..

“போய் சாதம் அவிஞ்சிட்டான்னு பாத்துட்டு வாடி….

“ஏம்மா நீ இப்போ அங்க இருந்துதானே வார இதெல்லாம் பார்த்துட்டு வர மாட்டியா நா பார்க்க மாட்டேன் போம்மா

“அடியே பொம்பள புள்ளயாடி நீ?

“ஏம்மா பார்த்தா தெரியலயா??

“வாய் வாய் இது ஒன்னுதான்டி ஒனக்கு மிச்சம் ஒன்ட வயசுல பொண்ணுங்க

“மா…..ஸ்டோப் நீ என்ன சொல்லப்போரன்னூ தெரியும்
ஒ…வயசு பொன்னுங்க எல்லாம் சாதம் பொங்குராங்க
குழம்பு வெக்கிராங்க
காலேஜ் போராங்க
டிகிரி எடுக்குராங்கன்னு எப்போ பாத்தாலும் இதே டயலொக்க சொல்றியே….
எ வயசு பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி கொழந்த கூட இருக்கே அதெல்லாம் சொல்லி காட்டுறியா??

ஏதோ ஆதங்கத்துல மனசுல உள்ளத சொல்லிட்டங்க
எங்கம்மா எந்த ரியக்ஷனும் காட்டாம போன் எடுத்து நோன்ட ஆரம்பிச்சிட்டா…….

“என்னம்மா ஒன்னும் சொல்லாம போன பாக்குர மாப்புள்ளட போட்டோவான்னு எட்டி பாத்தேங்க….

அய்யோ ஆத்தி எங்கம்மா ஹிட்லருக்கு கோல் போட்டிருக்குங்க

என்ன முழிக்குரிங்க நாசிப்படை ஹிட்லர் இல்லங்க எங்க வீட்டு ஹிட்லர் எங்கப்பா

அடிச்சி புடிச்சி போன பறிச்சி

“இப்போ கல்யாணமா முக்கியம் சாதம்தானே முக்கியம் நீ ரெஸ்ட் எடும்மா நான் பாத்துட்டு வாரேன்னு நேக்கா எஸ்கேப் ஆவி கிச்சன்னுக்க வந்தேங்க…..

அங்க போனதும் ஸ்டவ்ல இருந்து ஒரு எட்டடி தள்ளி நின்னு….

அது ஏன்னு கேக்குரிங்களா?
சாதம் அவியக்க நொர நொரயா வருமே அத பாத்தா நேக்கு பயம்ங்க அது முகத்துல பட்டுட்டா நமக்கு பியூட்டி இம்போர்டன்ட் இல்லியா அதான்!

சரி வாங்க மீதிய சொல்லுரன் எட்டடி தள்ளி நின்னு….

“சாதமே..சாதமே அவிஞ்சிட்டியான்னு ரெண்டு மூனு தரம் கேட்டங்க அது ரொம்ப வீம்பு புடிச்சது போல எனக்கு ரெஸ்போன்ஸே பன்னல நானும் கோவத்துல போவம்ன்னூ திரும்பினா பின்னாடி
அம்மா

“என்னடி பன்னிட்டு இருக்க??

“பாரும்மா நீ வெச்ச சாதம் உங்ககிட்டதான் சொல்லும் போல எங்கிட்ட சொல்லுது இல்ல…..

சொன்னதுதான் தாமதம் எங்கம்மா மொத்து மொத்துன்னு முதுகுலயே மொத்திட்டாங்க சகோஸ் இப்ப கூட வலிக்குது தெரியுமா??

நீங்களே சொல்லுங்க சகோஸ் நியாயமா நான்தானே கோபப்படனும் எங்கம்மா என்னைய சாதத்துகிட்ட அறிமுகபடுத்தலன்னு நானே அம்மாதானேன்னு மன்னிச்சி விட்டா அவங்க அடிச்சிட்டு போராங்க

நம்ம சும்மாவே இருக்குரத்தாலதானே சகோஸ் இவங்க இப்புடி பன்ராங்க முடிவு பன்னிட்டேன் சகோஸ் நானும் சதம் வெக்கப்போரேன்….
அதுகிட்ட எங்கம்மாவ மட்டும் அறிமுகப்படுத்தவே மாட்டேன்
ஆருகிட்ட

பட் கண்டிப்பா ஒங்கள பத்தி சொல்லுவேன் மாதாஜிட சாதத்த சாப்புட எல்லாரும் ரவா மிக்ஸர் வாங்கிட்டு வாங்கோ…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க