கொரோனாவே இனி வராதே

1
498
corona-health-2fb99bee

அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
ஆசைகளை மனதில்
அமைதியாய் அடக்கிக்கொண்டு
இன்ப துன்பத்தை இதயத்தோடு
இணையம் மூலம் பகிர்ந்து
ஈரடி தள்ளி நின்று
உறவாடுவது உன்னாலே

உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம்
ஊரெல்லாம் மரண ஓலம் காதைப் பிளக்க
எங்கும் கொரோனா நீ தாண்டவம் ஆடுகிறாய்
ஏன் இந்த கொடிய நோய் என்று ஏக்கத்தோடு நகர்கிறது எம் மனித வாழ்வு
கொரோனாவே இனி நீ வராதே பூமிக்கு

உற்றார் உறவை பார்ப்பதில்லை
கூடி மகிழ்ந்து உண்பதில்லை
கொடிய கொரோனா நீ வந்ததென
மரணம் இங்கு மலிந்ததுவோ…
கொரோனாவே இனி நீ வராதே பூமிக்கு…..

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True