கொரேனா

0
624
Coronavirus illustration of a virus on a turquoise background 3d render

 

 

 

 

உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ…..
உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….
உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது.

நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை
நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லை
நீ என்ன தான் செய்கிறாய் என்றும் அறியவில்லை
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.
நீ மனித உயிர்களை காவுகொள்ளும் ராட்சன் என்று….

உலகமே சுக்குநூறாகி தனிமை என்னும் வாசகம் தாண்டவம் ஆடுகிறது.
விந்தைகள் பல புரிந்து
வியக்க வைக்கும் சாகசங்களை தந்த
விஞ்ஞானமும் வைத்தியமும் வியந்து பார்க்கும் வைரஸ் நீ…

எங்கள் அழுகையை ரசித்தது போதும்
எங்களை வீட்டிலே முடக்கியது போதும்
எங்கள் பொருளாதாரத்தை வீணடித்தது போதும்
எங்கள் உறவுகளின் இழப்பை பார்த்தது போதும்
எங்களை தனித்தனியாக பிரித்து போதும்
உன்னை அடக்க முடியவில்லை
ஆனாலும்
உன்னை தடுக்க முயற்சிக்கிறேன்
உனக்கெதிரான மருந்தை கண்டுபிடிக்கவில்லை
ஆனால் உன்னை வெல்லும் மருந்து நோய் ஏதிர்ப்பு சக்தியே….

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க