குழிப்பணியாரம் (Kuzhi Paniyaram)

0
4387

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 200 கிராம்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – 100 மி.லி

கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா – ஒரு கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 1

கடுகு – ஒரு ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

Kuzhi Paniyaram
 
Kuzhi Paniyaram

செய்முறை:

  • இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக  இருபுறமும் திருப்பி வேகவிடவும். 
  • புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.

நன்மைகள்: 

  • முழுக்க ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும்.
  • குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி  ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க