குழந்தையின் குரல்

0
682
UN0269508_0

உணர்வில்லாத எனக்கு உயிர் கொடுத்து

பார்க்காத என்மேல் அதிக பாசம் வைத்து

அரவணைப்பை விடாமல் என்மேல் அன்பு வைத்து

பத்துமாசமாய் என்னை பக்குவமாய் சுமந்து

சுமை என்று ஒருபொழுதும் கருதாமல் சுகமாய் என்னை சுமந்து

பண்பாக என்னை பத்திரமாய் பெற்றெடுத்து

என்னை காண துடித்த என் தெய்வமே…!

உன்னை கண்டதும் நான் சந்தோஷத்தில் துள்ளினேன்

அப்போது எனக்கு தெரியவில்லை

உன்னுடன் உடலும் உயிருமாய் இருந்த

அந்த உலகை மீண்டும் நான் காண முடியாது என்று…

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments