கிருஸ்துமஸ் கள்ளி

0
625

 

 

 

 

 

 

ஷ்லம்பெர்கரா –Schlumbergera என்பது கள்ளி இனத்தில் ஒன்பது சிற்றினங்களை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு   சிறிய வகைத்தாவரம். இது பிரேசிலை தாயகமாக கொண்டது. 150 வருடங்களுக்கு முன்பிருந்தே இச்செடிகள் பரிசுச்செடிகளாக வழங்கப்பட்டுவருகின்றன.

நிழலான இடங்களிலும் மரங்களின் மீதும் பாறைகள் மீதும் வளரும் இக்கள்ளிச்செடி பிற பாலைக்கள்ளிச்செடிகளைப்போல கரடுமுரடாக முட்களுடன் இருக்காமல் அடர் பச்சையில் அழகான நீண்ட ரிப்பனைபோன்ற தட்டையான  நிறைய கணுக்களுடனான  தண்டுகளும்,  தண்டுகளின் நுனியிலிருக்கும் கணுக்களிலிருந்து தோன்றும் பிரகசமான ரோஜா நிற மலர்களுடனும் காணப்படும்.

இவை பொதுவில் கிருஸ்துமஸ் கள்ளி, நண்டுக்கள்ளி, விடுமுறைக்கள்ளி என அழைக்கப்படுகிறது. தற்போது இளஞ்சிவப்பு மஞ்சள் வெள்ளை ஆரஞ்சு மற்றும் அடர் சிவப்பு, ஊதா நிறங்களில் மலர்களை தோற்றுவிக்கும் இக்கள்ளிச்செடிகளையும் தோட்டக்கலைத்துறையினர் உருவாக்கியிருக்கின்றனர்

இலைகளின்ன நுனியிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் மலர்கள் மலருக்குள் மலர்கள் இருப்பது போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதாலும் சிறிய செடியிலேயே ஏராளமான மலர்கள் மலர்வதாலும் இச்செடியை அழகிய தொட்டிகளில் பலர் விரும்பி வளர்க்கிறார்கள்.

இச்ஸேடியை முக்கிய விழாக்கால்னக்களில், குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் பரிசாக பலர் கொடுக்கவும் வாங்கவும் விரும்புவதால் இதற்கு இப்பிரத்யேக பெயர் வந்திருக்கிறது.

 மலர்கல் நிறைய இனிப்பான திரவத்தை  சுரந்து அடிப்பகுதியில்  சேகரித்து வைத்திருக்கும். பெரும்பாலான செடிகளில் ஹம்மிங்பறவைகள் எனபப்டும் தேன் சிட்டுக்களால் மகரந்த சேர்க்கை நடைபெறும். சிறிய சதைபற்றான பழங்களையும்  கறுப்பு நிற விதைகளையும் இவை கொண்டிருக்கும்.

 மிக அதிகம் வளர்க்கப்படும் இனங்கள்

Schlumbergera gaertneri 

Schlumbergera lutea 

Schlumbergera rosea ஆகியவையே

  −4 °C (25 °F). சீதோஷ்ணம் இருக்கும் உலகின் பகுதிகளில் இவை செழித்து வளரும்.    பழங்களின் ஒட்டும்தன்மை காரணமாக கொத்திதின்ன வரும் பற்வைகளின் அலகுகளில் இவை ஒட்டிக்கொண்டு பின்னர் அலகுகளை மரங்களில் பறைவைகள் தேய்க்கையில் அங்கேயே விழுந்து வளருகின்றன.

சதைப்பற்றான இலைகளை கிள்ளி வேறு இடங்களில் நட்டுவைத்தும் இவற்றை வளர்க்ஆலாம். 1950களிலிருந்தே இச்செடிகள் தொட்டிகளில் அலங்காரச்செடிகளாக வளர்க்கபட்டுவருகின்றன.

 கிருஸ்துமஸ் காலங்களில் இவை ஏராளமாக விற்பனை செய்யப்படும். அமெரிக்காவில் நவம்பரில் நன்றி தெரிவிக்கும் நாளான  Thanksgiving holiday அன்றும் இவை பரிசாக அளிக்கபடுகின்றன.இது அதிர்ஷடக்கள்ளியாகவும் கருதப்படுகின்றது.

இவை வெப்பம் படாத, ஆனால் ஒளி இருக்கும் இடங்களில் வளர்கையில் மிக அதிக அளவில் மலர்களி கொடுக்கும். வீடுகளுக்குள்ளும் இவற்றை வளர்க்கலாம் எனினும் ஒளி தொடர்ந்து தேவைப்படும் செடிகள் ஏன்பதல் இரவிலும் விளக்குகளை இவை இருக்குமிடங்களில் அணைக்காமல் இருப்பது உசிதம். .முறையாக பராமரித்து வந்தால் ஒற்றைச்செடி 20’லிருந்து 30 வருடங்கள் வரையிலும் உயிர்வாழும். தொட்டியின் மண் உலர்ந்திருந்தால் மட்டுமே நீர் விடவேண்டும் அதிகம் நீர் ஊற்றினால் செடி உடனே அழுகி இறந்துவிடும்.

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க