காணாமல் போன காதலி …

0
634
heart-missing-you-17966132-81eb232f

கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே …

நின்னா அவ நினைப்பு
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா அவ நினைப்பு
நிழலா என்னை தொடருதுங்க …
படுத்தா அவ நினைப்பு
கனவா வந்து ஓடுதுங்க …
கரையேதும் தெரியாம
கண் கலங்கி நிக்கிறேங்க …

காலம் கடத்துறேன்னு
கழட்டி விட்டு போனாளோ ?
காசு பணம் தேடி
கடல் கடந்து போனாளோ ?
கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோடு போனாளோ ?
எதுவும் புரியலையே !
என்னாச்சு தெரியலையே ???…

தெரிஞ்சவங்க சொல்லுங்களே
தினம்தோறும் சகுறேன்னு !
தின்னா  இறங்கவில்லை
திரை மூடி தூங்கவில்லை
தினமும் அவ நெனப்பு
தீயா எரிக்குதுன்னு …

மனசெல்லாம் நெறைஞ்சவள
மறக்கத்தான் முடியலையே !
மண்ணுக்குள்ள போற வரை
மனசுக்குள்ள நிப்பாளே !
மரணமும் வந்து அவளை
மறக்கத்தான் செய்திடுமோ ???…

சேர்ந்து சாவமுன்னு
சத்தியம் தான் செஞ்சாளே !
சத்தியமும் செத்துத்தான்
போயிடுச்சோ ?
போனவளும் வருவாளோ
போகும் உசுர பிடிப்பாளோ???…

பிடிக்காம போயிருந்தா
பிழை ஏதும் இல்லையடி? .
பிள்ளைக்கு பேரு வச்சு
பிறவிப்பயன் தந்திடுடி !…

பிள்ளையா இருந்துன்ன
பிரியமா பார்த்திடுவேன்
பின்னும் ஓர் பிறவிக்கொண்டு
பிரியாம சேர்ந்திடுவேன் …

இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
கோவை

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க