கனவினில் முளைத்த காதல் !

0
422
FB_IMG_1548405558679

 

 

 

 

 

 

தினசரி என் கனவுகளில்
வந்து போகும் நீ !
ஓரிரு தினங்களாய்
வர மறுப்பது ஏனடா ?
அன்பே……!
என் மீது ஏதும் கோபமா ?

முந்தைய நாள் இரவில்
முத்த மழையில் நனைய மறுத்ததால் இந்த கோபமோ ?
இல்லை,
ஆழியின் ஆழத்தில்
முத்தெடுக்கும் உன் முயற்சியை தடுத்து நிறுத்தியதில்
எழுந்த கோபமோ …?

இன்னுமொரு இரவு வரும்
அந்த இரவிலும் கனவு வரும்
கனவினில் கண்களின்
வழியே வந்து
மூச்சு மட்டுமளவு
முத்தமிட்டுக் கொள்
மறுக்க மாட்டேன்

கனவினில் முளைத்த
காதல் என
கணப் பொழுதினில்
கலைந்து விடாதே
கண்களை திறந்தும்
கனவு காண்கிறேன்
நிஜத்திலும் உன்
செல்ல கோபங்கள்
தொடர வேண்டும்…!

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க