கடைவிழி கஜாபுயலு

0
598

கோடையில பூமிக்கு
போர்வதான்டி உன்நிழலு!
சாடையில இனிக்குதடி
உன்கழுத்து தேன்குழலு!

தென்றலுக்கு உன்கூந்தல்
பூமணக்கும் கார்குழலு!
வண்டுகளுக்கு உன்மேனி
தேன்சுரக்கும் பாற்கடலு!

நாதித்திக்கும் முத்தத்திற்கு
நல்சுவை தேனிதழு!
தலசுத்தவைக்கும் பித்தத்திற்கு
நிவாரணி உன்விரலு!


புருவமிரண்டும் கூத்தாடும்
மழைத்தோகை மயிலு!
மேகமிருண்டு வான்மூடும்
இனியுமடிக்காது வெயிலு!

போதையின்றி மயக்கும்
விழிச்சாயம் கருங்குயிலு!
புன்சிரிப்பால் பொசுக்கும்
பூலோகப் பூந்தயலு!


திட்டமிட்டு சிக்கவைக்கும்
கடைவிழி கஜாபுயலு!
வட்டமிட்டு என்னமட்டும்
பம்பரமாய் நீசுழலு!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க