ஒற்றை வீடு

1
900
121211973_2658347437715544_4436431138927514690_n-721fc264

“டேய் மச்சி இந்த ஊருக்கு வேலைக்கு வந்தது 6 மாசம் ஆகிட்டு இன்னிக்கி லீவ் தான வாட எங்கசரி போய்ட்டு வரலாம்”

“எங்கட போறது”

“இந்த பக்கம் கடல் இருக்குதான போய் பாத்துட்டு வரலாம்”

“இன்னு வரைக்கும் அந்த பக்கம் போகலடா நான்”

“சரி இப்ப போவோம் கார் இருக்குதான வாங்கடா போவோம்”

“சரி போவோம் 6 மணி இப்ப போய்ட்டு நேரத்தோட வந்துடலாம்”

மூன்று பேரும் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

“மச்சி அங்க பாரு செமயா இருக்குல அந்த புல்லு என்னடா இவ்வளோ உயரமா இருக்கு”

“ஆமாடா செமயா இருக்கு..! அங்க பாரு அந்த பக்கம் குளம் இருக்குடா”

இவ்வாறு பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்றதும் கடற்கரை தென்பட்டது அங்கே சென்று சிறிது நேரம் விளையாடி விட்டு போகலாம் என்று கிளம்பினார்கள்.

இருளானது. அன்று அமாவாசை. வெளிச்சமும் இல்லாமல் இருந்தது. காரின் வெளிச்சத்திலே சென்று கொண்டிருந்தார்கள்.

வீதி சரியாக விளங்கவில்லை அதனால் மண் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது.

“டேய் எங்கட ரோட்ட காணல”

“அந்த பக்கம் போ பாக்கலாம்”

ஒரு மணித்தியாலமாக சென்றும் பாதையை காணவில்லை. தூரத்தில் லைட் எரியும் வெளிச்சம் விளங்கினாலும் சில இடங்கள் நீராக சில இடங்கள் மணல் குவிந்து இருந்தால் வீதியை தேடுவதில் சிரமமாக இருந்தது.

“மச்சி கூகுள் மேப்ல பாரு எங்க இருக்கோம்னு” அவனும் பார்த்தான்.

“மச்சி கடற்கரை ஓரத்துல தான்டா நிக்கிறோம்”

வலது பக்கம் திரும்பி பார்த்தனர் கடல்தான்.

“வெளிச்சம் இல்லாம எதுவும் விளங்களடா நான் நினச்சன் மணல்னு”

மேப்பை பாரத்தப்படி வீதி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிறிய வீடு கடற்கரை அருகில் தென்பட்டது.

“அங்க பாருங்கடா வீடு ஒன்னு இருக்கு”

“ஆமாடா”

“வா பாக்கலாம்..!  இன்னும் கொஞ்ச தூரம் போனா ரோட் வந்துடும்தான அதனால வாங்கடா பாத்துட்டு போகலாம்” மூன்று பேரும் அந்த வீடு நோக்கிச் சென்றனர்.

கதவு ஜன்னல் எல்லாம் உடைந்து கண்ணாடி துண்டுகள் கற்கள், ஓடுகள் உடைந்து கீழே விழுந்து கிடந்தன.

“பழைய வீடு என்ன மச்சி”

“ஆமாடா எதுக்கு இங்க கட்டி வச்சி இருக்காங்க”

“இப்ப அந்த ஆராச்சி எல்லாம் தேவயில்ல வா சும்மா பாத்துட்டு போய்டலாம்”

அப்படியே போன் ப்ளேஸ் லைட்டை ஆன் செய்து உள்ளே சென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடிரென கிளாஸ் கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டது உடனே திரும்பி பார்த்தார்கள்.

“என்னட கிளாஸ் விழுந்த சத்தம் கேக்குது”

“ஜன்னல்ல இருந்து விழுந்து இருக்கும்டா”

மூலையில் இருந்த சில வௌவால்கள் பறந்தன.
தொடர்ந்து கண்ணாடி ஓடுகள் விழும் சத்தம் கேட்க யாரோ அங்கும் இங்கும் ஓடுவது போன்றும் சத்தம் கேட்க.

“மச்சி யாரோ ஓடுர மாதிரி இருந்துச்சில”

“டேய் வௌவால் பறக்குதுடா”

“ஓ..!”

சில நொடிகளில் சிறு பிள்ளைகள் அழுவது போன்றும் சத்தம் கேட்க மறு பக்கம் ஒரு ஆணும் பெண்ணும் அழுவதும் போன்று இருந்தது.

“ஏய்…! வாங்கடா போய்டலாம்”

“ஆமாடா ஏதோ சத்தம் கேக்குதுடா” உடனே வெளியே செல்ல ஓடினார்கள். அப்படியே வீட்டின் மேலிருந்து சில உருவங்கள் அவர்களை சுற்றியது. கொடுரமான எரிந்த உருவத்தோடு சுற்றி அவர்களின் முன்னால் தோன்றின. அவர்களுக்கு பயம் உச்ச கட்டத்தில் இருக்க அங்கும் இங்கும் வாசலை மறந்து ஓட ஆரம்பித்தனர். அந்த உருவங்கள் அவர்களை துரத்திக் கொண்டே வந்தன.

ஓடிக்கொண்டு ஜன்னல் தென்பட அதன் வழியாக பாய்ந்து வெளிய வந்தனர்.

அதன் பிறகு அந்த உருவங்களை காணவில்லை. உடனே காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றனர். மணல் மேடு பள்ளம் பார்க்காமல்.

சிறிது தூரம் சென்றதும் வீதி வந்தது வீட்டுக்கு வந்த பிறகே அவர்களின் பதற்றமும் பயமும் தனிந்தது.

“மச்சி பேய் இருக்குடா அங்க”

“ஆமாடா மச்சி என்னால முடியலடா ஹார்ட் நிக்க போற மாதிரி இருந்துச்சிடா” அப்படியே முகத்தை கழுவிய பின்னர் கடவுளை வணங்கிவிட்டு உறங்கினார்கள்.

காலையில் எழுந்து வேலைகளை முடித்தும் அந்த பதற்றம் கொஞ்சம் இருந்தது.

“மச்சி டீவி போடுடா கொஞ்ச நேரம் பாக்கலாம்”

டீவியில் நிகழும் அமானுஷ்யம் என்ற நிகழ்ச்சி ஒன்று போய் கொண்டிருந்தது. அதில்

⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪⏪

சில வருடங்களுக்கு முன்பு

பெரிய பணக்காரர் ஒருவர் தனது குடும்பத்தோடு வாரத்தில் இரண்டு முறை கடற்கரை சென்று சந்தோசமாக நேரத்தை கழித்து வந்தார்.

சில நாட்கள் கழித்து அங்கு ஒரு இடத்த வாங்கி ஒரு சின்ன வீட்ட கட்டி வைத்தால் இலேசாக இருக்கும் என்று வீடு ஒன்றை கட்டினார். சில நேரங்களில் குடும்பத்தோடு தங்கியும் இருப்பார்.
இவ்வாறு சில மாதங்கள் செல்ல.

அவரோடு வேலை செய்யும் சில நபர்கள் அவரின் மேல் பொறாமை கொண்டதால் சூழ்ச்சிகளில் ஈடுப்பட்டு அவரின் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்கும் அளவிற்கு வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து போக செய்தனர். இறுதியாக இந்த சிறிய வீடு மட்டுமே மிச்சம் ஆனது. அங்கேயே குடும்பத்தோடு வசித்தார். கடன்கள் அதிகரிக்க மன உளைச்சலுக்கு ஆளாகி போனார்.

சூழ்ச்சி செய்தவர்கள் சந்தோசமாக வாழ்ந்தனர் அவரின் சொத்தில்.

சில நாட்கள் செல்ல வாழ்க்கை இருண்டு போனது இனி வாழ முடியாது. மனைவி பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியாது  என்று எண்ணியதை மனைவி பிள்ளைகளிடம் அழுதப்படி கூறினார். நாங்க வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்றவுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

எல்லோரும் அறையில் ஒன்றாக தூங்கும் சமயம் அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து குடும்பத்தோடு எரிந்து இறந்தனர்.

அப்போதிலிருந்து யாரும் அங்கே செல்வதில்லை அப்படி சென்றாலும் அவர்களின் சத்தம் உருவங்களை பார்த்து பயந்து ஓடிவந்து விடுவார்கள்.

ஒரு முறை அவருக்கு சூழ்ச்சி செய்த 4 பேர் அங்கே சென்று திரும்பவில்லை அங்கேயே அவர்களால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட நாள் அவர்கள் எரிந்து இறந்து போன நாள் மே 7.

மே 7 அன்று அங்கு யாரு சென்றாலும் அவர்களால் கொல்லப்படுவார்கள். மற்ற நாட்களில் கண்ணுக்கு தெரிவார்கள் தவிர கொல்லமாட்டார்கள்.

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

மூவரும் ஒருவொருக்கொருவர் முகத்தை பார்த்துக் கொண்டனர்.

“மச்சா நேத்து நாங்க போன வீடுதான்டா”

“ஆமாடா..!”

“டேய் காலண்டர பாருங்கடா”

இன்று தேதி மே 7

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Mohamed Faisal
Mohamed Faisal
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

super