ஏழை இவள்

0
1208

 

 

 

 

அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லை
ஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும்
செய்யவில்லை
இன்பம் வரும் போது கூட இனிக்க
யாரும் பேசவில்லை
ஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு
நாதியில்லை
உள்ளவற்றை சொன்னபின்பும்
யாருமெனை நம்பவில்லை
ஊர் இருட்டி போனபின்பும்
அருகிருக்க எவருமில்லை…
எதுவரைக்கும் விதியிருக்கும்
இன்றுவரை நினைத்தில்லை
ஏராளம் மொழியிருந்தும் எழுத
வார்த்தை போதவில்லை..
ஐயிரண்டு திங்கள் வரை சுமப்பதற்கு
வரமும் இல்லை..
ஒளியிழந்து போன கண்கள் ஒருவரையும் தேடவில்லை
ஓடி ஓடி ஒளித்தாலும் துரத்தும் விதி விடுவதில்லை……..
ஒளவையைபோல் வாழ்ந்திருந்தால் வாழ்வில் ஒரு துன்பமில்லை……..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க