எழுந்திடு

0
1732

விழுகையில் அழுதவனாக இராமல்
எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற
எழுந்திடு !

உன்னை உன் நிலை தாழ்த்தி
உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே
ஓங்கி வளர்ந்திட எழுந்திடு !

எம்முள் தீயை வளர்த்து
அத்தழல்தனில் குளிர்காயும் கூட்டம் விரண்டிட
ஒற்றுமையாய் எழுந்திடு !

நாம் உண்டு பிறர் தவிக்கும் நிலை தவிர்த்து
வறியோர் மகிழும் நிலை செய்ய
எழுந்திடு !

அறியாமை எனும் காரிருளை
அறிவுத்தீபம் ஏற்றி விலக்கிட
உதய சூரியனாய் இன்றே எழுந்திடு !

தகுதியானவர் ஒதுங்கி விட்டால்
தகுதியற்றவர்கள்களால் ஆளப்படுவாய் என
உணர்ந்து எழுந்திடு !

இன மத மொழி பேதம் கொண்டு
இவ்வையத்தினை நடமாடும் சிறைச்சாலையாய்
மாற்றுதல் தடுத்து பேதம் கொன்று
புத்துலகம் படைக்க எழுந்திடு !

நீ ஜெயம்கொண்ட பாதையை
நீ அறிவாய்
அப்பாதைதனில் இளையோரை
வழி நடத்திட எழுந்திடு !

உன்னைப் போல் இன்னொருவன் இல்லை
இவ் உலகை உயர்த்திட என எண்ணி
எழுந்திடு !

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க