எல்லாமும் ஆகிறாய் நீயே

0
823
main-qimg-2d3af8ee7896b36683d896cce3ea8218-1

தாலிலே தவழ்ந்து வந்து 
தாயுமானாய்

தோளினை நிமிர்த்தி நிற்க 
தோழனுமானாய் 

கற்க வைத்து எனக்கு
ஆசானுமானாய்

சகோதர மொழிக்கு 
செவிலியும் ஆனாய் 

வற்றாத காதல் கொள்ள வைத்து 
காதலியும் ஆனாய் 

மிடுக்கான துணையுடன் 
மனைவியும் ஆனாய் 

கவியுமானாய் 
கவிக்குள் பொருளுமானாய் 

ஏட்டிலே எழுத்துமானாய் 
பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய் 

புலவனின் புகழுமானாய் 
நாடார்க்கு புத்துணர்வுமானாய் 

எப்போதைக்கும் பற்றுமானாய் 
இப்போதைக்கு போதையுமானாய் 

எழுதும் பொழுதெல்லாம் 
காவியமானாய் 

எழுதா பொழுதுகளில் எல்லாம் 
சிந்தையுள் ஓவியமானாய்

கண்மை பூச்சுக்கள் இன்றி 
அழகியுமானாய்  

சிலையின்றி செதுக்கல் இன்றி 
கலைகளின் தெய்வமானாய்

எல்லாவற்றுக்கும் மேலாக
எம் உயிருமானாய்

உயிரினை உயர்த்திடும்
உணர்வுமானாய்….. 

என் தமிழே… 
என் உயிரே 
எனக்கு எல்லாமும் ஆகிறாய் நீயே…..

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க