எறும்புண்ணி (Pangolin)

0
4293

எறும்புகளை உண்ணும் விலங்கு = எறும்புண்ணி (வாக்கியப் பயன்பாடு) – எறும்புத்தின்னி கவச உடலைப் பெற்றுள்ளது. இது அழுங்கு எனப்படும் கவச உடல் விலங்கு ஆகும்.

இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது. இதில் இந்தியப் பாங்கோலின் என அறியப்படும் எரும்புத்தின்னிகள் அழுங்கு என்னும் பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமண்டுவா  என்னும் சொல் தென் அமெரிக்காவில் வழங்கும் தூப்பி மொழியில் இருந்து போர்த்துகீசிய மொழி கடனாகப் பெற்று, பின்னர் அதன் வழியாக ஆங்கிலத்திலும் , அறிவியல் கலைச்சொற்களிலும் இச்சொல் எறும்புண்ணி என்னும் பொருளில் வழங்குகின்றது.

  • எறும்பு தின்னி, கல்வராயன் மலை வனப்பகுதியில் அதிகளவில் உள்ளது. அவை, கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். எறும்பு தின்னி, 30 ஆண்டுகள் வரை வாழும். மனித நடமாட்டம் இருந்தால், தன் உறுப்புகளை சுருட்டிக் கொண்டு பந்து போன்று மாறிவிடும் தன்மை கொண்டவை.
  • எறும்புத்தின்னி தகவல்கள் வெப்ப மண்டலப் பகுதிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய ஆசிய நாடுகளில் எறும்புத்தின்னிகள் காணப்படுகின்றன. இதனை கட்டியான, தட்டையான செதில்களைக் கொண்டு அடையாளம் காணலாம்.  அச்சுறுத்தல் ஏற்படும்போது இது உருண்டையாக தலையை வாலுக்கடியில் பொருத்தி சுருண்டுகொள்ளும். அப்போது செதில்கள் கவசம் போல தற்காப்பினை அளிக்கிறது.

pangalion
  • மேலும் அவற்றுக்கு ஆபத்து ஏற்படும்போது, வெறுப்பூட்டுகிற, துர்நாற்றம் கொண்ட திரவத்தை ஆசனவாய்க்கு அருகில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றன. இதன் நாற்றம் காரணமாக இதனை கொல்ல வரும் விலங்கினங்கள் துரத்தப்படுகின்றன.

இது ஒரு பாலூட்டி. பூச்சியுண்ணியாகிய இதன் முக்கிய உணவு எறும்புகள் மற்றும் கரையான்களே. பற்களற்ற இவை மெல்லும் தன்மையுடைவை. இவற்றின் ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும். இவை பூமிக்கடியில் 11 அடி வரை குழிதோண்டி அதில் வாழும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments