என் வாழ்க்கை

0
516

 

 

 

 

 

 

என் வாழ்க்கையில்
கண்ணீர் கரைந்து சென்ற
காலங்களே அதிகம்
நான் வீணடித்து நாட்கள்
என் வாழ்வில்
மீண்டும் வருமா????

நான் இலட்சியத்தோடு வந்தேன்
இன்று இலட்சியம் இல்லாத
வெறும் ஜடமானேன்….

நான் என்ன செய்வேன்
என்றும் தெரியவில்லை
எங்கு தான் செல்வேன்
என்றும் புரியவில்லை ….

திக்கு தெரியாத
காட்டில் தன்னந்தனியே
நிற்கிறேன்
அதில் வழி இருந்தும்
வழி மறந்தேன்
விழி இருந்தும்
விழி இழந்தேன்
உயிர் இருந்தும் உணர்விழந்தேன்
உறவிருந்தும் அன்பிழந்தேன்
இதையெல்லாம் காலம்
செய்த கோலமடி !!!
காலம் தந்த காயமடி!!!

எனக்காய் ஒரு விடியலை
தர வேண்டும்
இறைவன்……..

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க