என் வாழ்க்கை என் பயணம்

0
2293

பயணங்கள் அனைவர் வாழ்விலும் பொதுவானது. ஆனால் எனது வாழ்விலோ அதிசயமானது…..
யாராவது பிராயணம் போகிறோம் என்றால் அவர்களை விட நான் குதூகளிப்பேன் எங்கு செல்கிறீர் என கேட்டு கேட்டு.

காரணம் முன்பு கூறியது போல்தான் நான் பயணம் சென்றால் அது அதிசயம்தான். சென்னையை வாழிடமாக கொண்ட நான் காலேஜ் முடியும் வரை சென்னையை கூட தாண்டியது இல்லை ஏன் சென்னை விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் கூட நான் அறியாத ஒன்றாய்த்தான் இருந்தது…..

இந்த காலத்துல இப்புடி ஒருத்தங்களான்னு நீங்க கேக்குரது எனக்கு விளங்குது நான் வளர்ந்த விதம் அப்புடிங்க. வீட்ட எதிர்த்துகிட்டு காதல் திருமணம் செஞ்சிக்கிட்ட பெற்றோருக்கு பிறந்த பொண்ணுதான் நான். காதலோட தீவிரம் குடும்பத்த எதிர்த்தாங்க. காலங்கள் நகர பணத்தோட தேவை அவங்களோட காதல அழிச்சிட்டு. அவங்கட பிரச்சினைக்கு காதலை குத்தம் சொல்லத் தொடங்கினாரு என்னோட அப்பா.

அவரோட நெலம அவர்ட பொண்ணுக்கு வரக்கூடாதுன்னு ரொம்பவே கண்டிப்பா வளத்தாரு ஒரு கட்டம் வரைக்கும் அந்த கண்டிப்புல நியாயம் விளங்க ஆரம்பிச்சதால அமைதியா இருந்த எனக்கு நண்பர்களின் பயணக்கதைகளை கேட்கும் போது மனசு ஏங்கும் நான் இருப்பது ஒரு சிறையிலோ என மனம் அங்கலாய்க்கும் எப்போது சிறகு முளைத்து அச்சிறையை விட்டு வெளியேறுவேன் என நெஞ்சம் பதபதைத்த நாட்கள் ஏராளம்….

என் போன்ற பெண்களுக்கு காதல்,கல்யாணம்,கல்வி என்பன கனவாய் இருந்தன ஆனால் எனக்கோ….
பயணம் போகனும் எந்த கண்டிப்பும் இல்லாம சுதந்திரமா போகனும்….
பஸ்,ட்ரெயின்,ப்ளைட்ன்னு சுத்தனும்….என்னோட பயணக் கனவு மனாலி!

ஒரு நாள் என் கனவும் பலித்தது என்னோட பிரயாணத்துல நான் உங்களையும் சேர்த்துக்க போறன்…
வாங்க சகோஸ்

என்னதான் அப்பா கண்டிப்பா வளர்த்தாலும் விதி ஆடும் ஆட்டத்தில் சிக்கத்தானே வேண்டும்…..

அப்படி ஒரு விதி வழியில் என் வாழ்வில் வந்தவன்தான் ஆதி…..ஆதித்யா

என்னை விடவும் மூன்று வயது பெரியவன். காலேஜ் நுழைவு நாளிலிருந்து என் பின்னால் விளையாட்டாய் சுற்றியவன் மனதில் ஒரு கட்டத்தில் நான் திடமாக அமர்ந்து கொண்டேன்…..

ஒரு நாள் என்னிடம் வந்து மனதில் உள்ளதை ஒப்புவித்தான் நானும் மறுத்து விட்டேன் அவனும் ஒதுங்கி கொண்டான் மருந்திற்கு கூட என் பக்கம் வரமாட்டான் அந்த குணமே என்னை அவன் பக்கம் ஈர்த்தது…..

ஒரு வருடத்தின் பின் மீண்டும் என்னிடம் வந்தான்….

“நான் கொஞ்சம் பேசனும்

“ம்…..

“உனக்கு ஒரு லோங் ட்ரிப் போனும்ன்னு ஆசை இருக்கு இல்லையா?? நான் இன்னைக்கு நைட் போரன் நீயும் வாரியா??

எனக்கு தூக்கி வாரிப்போட்டது எப்படி?? என மனம் கேட்டாலும் எதுவும் சொல்லாது அவ்விடத்தை விட்டும் நகர்ந்தேன்

“நான் நைட் 2 மணிக்கு உங்கட தெருவுல உனக்காக வெயிட் பன்னுவேன்…..நீ வரலன்னா 3 மணிக்கெல்லாம் கெளம்பிடுவேன்….

அவன் வார்த்தைகள் செவியில் விழுந்து கொண்டே இருந்தன ஆனால் எப்படி எதுவும் அறியாதவனோடு தனியாக??
அவன் நல்லவன்தான் ஆனாலும்??
அம்மா அப்பா விடுவாங்களா??
லட்சியம் பெரிசுன்னு போனா வந்து அப்பா மொகத்துல எப்புடி முழிக்குர??
யோசித்து யோசித்தே மணி 12 ஐ தொட்டது ஆனால் பதில் கிடைக்கவில்லை….

மண்டை வெடித்து விடும் போல் இருந்தது மனம் செல் செல் என மூளைக்கு கட்டளை பிறப்பித்தது….

நேரம் 2:30 திடமாக ஒரு முடிவெடுத்தேன் துணிகளை அள்ளி பைக்குள் திணித்தேன்….

அப்பாவிற்கு ஒரு மடல் வரைந்தேன்
“அப்பா என் வாழ்வில் நீங்கள் எந்தளவு முக்கியமோ அதேயளவு என்னோட கனவும் முக்கியம். என்னோட கனவுக்காக செல்கிறேன் அப்பா. நான் உங்களோட வளர்ப்பு. நிச்சயம் தவறு செய்ய மாட்டேன். நான் திரும்பி வரும் போது நீங்கள் தரும் தண்டைணையை தவறாமல் ஏற்றுக் கொள்வேன்……

உங்கள் மகள்”

மெதுவாக பின் கதவு வழியாக வீதியை அடைந்தேன். அவன் நின்றிருந்தான்…..

ஆறடிக்கும் உயரமாக மா நிறம் சிவந்த உதடுகள் கூர்மையாக மூக்கு அடர்ந்த புருவங்கள் என எனது விழிகள் அவனை அளந்து கொண்டிருந்தன….

அவன் என் முன்னால் சொடக்கு போட்டான்

” மேடம் போலாமா? “

நான் தலையை மெதுவாக அசைத்தேன் அவன் சிரித்துக் கொண்டே தலையை சிலுப்பி முடிகளை கோதிக் கொண்டு அவனது பைக்கை ஸ்டார்ட் செய்தான். முதன் முறை அந்நிய ஆடவனுடன் தயங்கி தயங்கி ஏறி வண்டியின் ஓரத்தில் அமர்ந்தேன்….

அவன் உதடுகள் புன்னகைத்து கொண்டே இருந்தது….அது ஏனோ என்னை இம்சித்தது. தீடிரென அவன் வண்டி எடுத்ததால் அவன் மீதே மோதி மீண்டேன்…..

வண்டி பறந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் ஓரிடத்தில் வண்டி நின்றது. அவ்விடம் விசாலமாக தெருவிளக்குகள் நிறைந்து பார்க்கவே பிரம்மிப்பாய் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன்….
சென்னை விமான நிலையம்
என கொட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்டு இருந்தது……

“இதுதான் எயார் போட்டா??

“ம்….எப்புடி இருக்கு ஹனி??

“வட் எனக்கு அப்பா அம்மா வெச்ச பெயர் இருக்கு

“அந்த பெயர சொல்லி கூப்டதான் நெறய பேர் இருக்காங்களே நான் எதுக்கு??

“😏😏😏

“பாத்து வாய் கோணிக்க போவுது

“🤬🤬

“சரி சரி மொறக்காத எயார்போட் எப்புடி இருக்கு??

“நல்லாத்தான் இருக்கு….ஆமா எனக்குத்தான் பாஸ் போட் இல்லையே

“என்னாது பாஸ்போட் இல்லையா அப்போ எப்புடி போரது?? கஷ்டம்தான் நீ வீட்டுக்கு கெளம்பு

“வட்……??

அவள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனை முறைக்கத் தயாராய் இருந்த சமயம்

“மேடம் எக்ஸ்கியூஸ் மீ

“யெஸ்….

“யுவர் பாஸ்போட்

“தேங்ஸ் பட் ஹவ்

“சேர்…..என ஆதியை கை காட்ட அவள் கேள்வியாய் அவனை பார்த்து விழிக்க

அவன் சிரித்துக் கொண்டே முன்னேறினான்

இவன் யாரு நம்ம செய்ரது சரியா?? இவனுக்கு எப்புடி இதெல்லாம் கெடச்சது போன வருஷம்தானே காலேஜ் முடிச்சான் இவனுக்கேது இவ்வளவு பணம் அவள் கேள்விகள் மண்டையை குடைய அவன் குரலோ அவள் சிந்தையை கலைத்தது

“இந்தா ஹனி டிக்கெட்

அதை வாங்கிப் பார்த்தேன்
சென்னை-டெல்லி

“வாவ் நம்ம டெல்லி
போறோமா??

“யெஸ் ஹனி

சட்டென என் முகம் மாறியதை அவதானித்த அவனோ

“என்ன ஹனி??

“அங்கதானே கேர்ள்ஸ கடத்திக்கொண்டு விக்குராங்க…..?

அவன் கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டான் அனைவரும் திரும்பி எங்களை பார்க்க நான் வேறு வழியின்றி அவனது வாயை பொத்தினேன் அவன் உயரத்திற்கு நான் எட்டி நிற்க வேண்டி இருந்தது…..

முதன் முறை அவன் கண்களை பார்த்தேன் அதிலுள்ள ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது…..

மெதுவாக என்னுடைய கைகளை எடுத்தேன்….

அவன் மெதுவாக என் காதருகில் வந்து
“என்னப் பார்த்தா அப்புடி விளங்குதா ஹனி??

நான் இல்லை என தலையசைத்தேன்…

அவன் சிரித்துக் கொண்டே வா ஹனி போலாம் என்றான்

ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவன் பின்னே சென்றேன்….

ஆனாலும் ஒவ்வொரு இடத்தையும் நன்றாக பதிந்து கொண்டேன் காரணம் இதுவே என் கடைசிப் பயணமாகவும் இருக்கலாம் இல்லையா??…..

பாதையின் நடுவில் எஸ்கலேட்டர் ஒன்று இருந்தது…..

முதல் முறை என்பதால் கால்கள் வழுக்கி விழப்போன என்னை தாங்கிப்பிடித்தான் அவன்……
பயத்தில் அவன் கைகளை இறுகப்பற்றி கொண்டேன்…..

எஸ்கலேட்டர் முடிந்தும் பயம் அடங்கவில்லை

“ஹனி அது முடிஞ்சிடா….

அப்போதுதான் அவன் கையை மெதுவாக விடுவித்தேன். அதற்கும் அவன் புன்னகையையே பதிலாக தந்தான்….

அவன் சிரிப்பு என்னை என்னவோ செய்ய மெதுவாக அவனை அழைத்தேன்….

“சேர்…..

“சொல்லு ஹனி

“உங்களோட பெயர்?

“ஹஹா ஆதித்யா உனக்கு எப்புடி தோனுதோ அப்புடி கூப்புடு…பேபி,டியர்,ஹனி,ஹபீ….அவன் குரலில் அழுத்தம் அவனது பேச்சில் சிரிப்பு வந்தாலும் கஷ்டப்பட்டு அவனை முறைத்தேன்…..

“சிரிப்பு வந்தா சிரிச்சிடு ஹனி…..

நான் எதுவும் பேசவில்லை செக்கின் முடிந்தும் எதுவும் பேசவில்லை…..

சிறுது நேரத்தின் பின் அறிவித்தலின் பின் விமானத்திற்கு என்னை அழைத்துச் சென்றான்…..

அம்மாடியோ மொட்டை மாடியில் நின்று எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் இதை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்பது எத்தனை வருடத் தவம்…
அவனை நன்றியுடன் பார்த்தேன்….
ஆனால் அவன் என்னை சட்டை செய்யவில்லை….

பணிப்பெண்கள் கை கூப்பி என்னை வரவேற்றனர். என் உலகில் என்னை நானே ராணியாக்கி பார்த்தேன்…..

இருக்கையில் அமர்ந்ததும்..
சீட் பெல்ட்டை அணியுமாறு உத்தரவு வழங்கப்பட்டது. அவன் போட்டுக்கொண்டான்….

ஆனால் நானோ முழித்துக் கொண்டிருந்தேன்…

“என்ன ஹனி போடலயா….?

“ம்ஹும்….

“நான் போட்டு விடவா??

“ம்……

“அவன் சிரித்துக்கொண்டே பெல்டை போட்டு விட்டான்….

மெது மெதுவாக விமானம் புறப்பட்டது

“ஹனி பயமாருக்கும் கையை பிடிச்சிக்கோ….

அவன் கைகளை பிடித்துக் கொண்டேன்….

ஆனால் மனமோ விமானத்துடன் சேர்ந்து பறந்து கொண்டிருந்தது…..

ஓ….ஹோ…. நானும் பறக்கிறேனே என என்னுள் சொல்லிக்கொண்டேன்

மேக கூட்டங்கள் என் அருகில் இருந்தன…
எத்தனை முறை அந்த மேகங்களை பிடிக்க அன்னையிடம் ஏணி கட்டி கேட்டிருப்பேன்….

அம்மாவின் ஞாபகம் வந்ததும் மனது கணத்தது….
அவனை திரும்பி பார்த்தேன் தூங்கிக் கொண்டிருந்தான்….

என்னை மறந்து அவனை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன்….

பின்பு சுதாகரித்து விழித்துக்கொண்டே..
சுற்றிலும் பார்க்கத்தொடங்கினேன்….
தூங்கி எனது பொழுதுகளை வீணாக்க நான் விரும்பவில்லை…..

சில மணித்தியாலங்களை கடந்து டெல்லியை வந்தடைந்தோம்….

நான் பார்த்த காட்சியை என்னவென்று சொல்லு அவ்வளவு மனிதர்கள் இப்படி ஒரு கூட்டத்தை நான் வாழ்வில் பார்த்ததே இல்லை….

அப்பா கோயம்பேட் மார்க்கெட் சன நெரிசலாய் இருக்குமென கூறியிருந்தார்…..
அதுவும் இவ்வாறுதான் இருக்குமோ என எண்ணிக் கொண்டேன்…..

அவன் என்னுடனே வந்தான்…..

எங்கு செல்கிறான் என்று தெரியவில்லை கேட்கவும் தோணவில்லை…..
வீதியை பார்த்துக் கொண்டே நடந்தேன். பின்னர் அது தலைநகர் இல்லையா அனைத்து கட்டடங்களும் தலையை உயர்த்தி பார்க்கும் படியே இருந்தன….

எனது விரித்த விழிகள் சுருங்கவில்லை.

திடீரென அவன் எனது தோள்களில் கைகளை போட்டு கொண்டான்…..
திடுக்கிட்டு அவனை பார்த்தேன்…

“ஹனி வாயப்பொளந்துட்டு வார ஏதாச்சும் வாகனம் வந்து இடிச்சுடும்….உன்னோட சேப்டிக்குதான்…

“ம்….

“ம்….க்கு மேல எதுவும் வராதா

“தேங்ஸ்

“எதுக்கு

“என்னோட ட்ரீம்ம புல்பில் பன்னதுக்கு….

“ஹஹா என்னோட கனவே உன்னோட கனவுகள நிறைவேத்துறதுதானே ஹனி

“பட் ஆதி…..

“உஸ் அவன் ஒரு விரலை என் உதட்டில் வைத்தான்….
நான் காரணம் சொல்வதை அவன் விரும்பவில்லை போலும்….

அந்த குழப்பத்தில் எங்கு செல்கிறோம் என்பதை கூட கவனியாது பஸ்ஸில் ஏறினேன்….

நடத்துனர் எங்களிடம் வந்தார்
“என்ன பாய் ஹனிமூனா?? அந்த கேள்வியில் எனக்கு கோபம் வரவில்லை மாறாக ஒரு புது உணர்வு அது வெட்கம் என்று பெயர் சூடிக் கொண்டது….

அவன் அழகாக சிரித்தான்…

ஜோடிப்பொருத்தம் சூப்பர் என்று விட்டு அவர் நடந்தார்….

“சொரி ஹனி அவருக்கு ஒன்னும் தெரியாது.

“இட்ஸ் ஓகே…

“தூங்கு ஹனி இன்னும் 2 ஹவர்ல எழுப்புரேன். அங்க போய் தெம்பா இருக்கணும்ல….

“வேணா நான் எதையும் மிஸ் பண்ண விரும்பல….

“சொன்னா கேளு ஹனி. வரும்போது பாத்துக்கலாம் நான் சொல்ரேன்ல”

“ம்..என்னதான் வாய் மறுத்தாலும் உடலுக்கு சற்று தூக்கம் தேவைப்பட்டதுதான்..

ஜன்னலோரம் சாய்ந்த என்னை தூக்கம் தழுவிக் கொண்டடது.

மீண்டும் செவியில் அவன் குரல் “கெட்-அப் ஹனி, டைம் ஆச்சு” மெதுவாக கண்விழித்துப் பார்த்தேன் உடலெங்கும் ஜில்லென்று இருந்தது…..

கண்ணாடிக்கு வெளியே பார்த்தேன் எங்கும் வெள்ளை படர்ந்தது போல் பனிமழைகள்….

அப்பப்பா! என் கண்களை என்னாலையே நம்ப முடியவில்லை!!

சுற்றி பார்த்த என் கண்களுக்கு ஒரு போட் தெரிந்தது. அது கனவோ என மீண்டும் கண்களை கசக்கிப்பார்த்தேன்.

இல்லை அது கனவு அல்ல! ஆனால் என்னோட கனவு…
மனாலி!!!
‘மானாலி உங்களை அன்புடன் அழைக்கிறது’ சொக்கிப்போனேன். ஒரு நொடி திரும்பி ஆதியை பார்த்தேன். அவன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்….

“வாவ் ஆதி நம்ம மனாலி வந்திருக்கோம்! ஐ கான்ட் பிலிவ்.. தேங்ஸ் ஆதி தேங் யூ ஸோ மச்…

“இட்ஸ் மை ப்ளசர் ஹனி. சரி வா….இப்போவே எல்லா எக்சைட்மென்டையும் கொட்டாத…..

அவன் பின்னே சென்றேன்….

உடல் குளுமையை
அனுபவித்தது ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்….

அவனை போல் கண்ணியமான ஆண்மகன் இவ்வுலகில் உண்டா என என்னை யோசிக்க வைத்தான் இரண்டு அறைகளை ஏற்பாடு செய்தான்….

“ஹனி போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வா நான் வெயிட் பன்னுறேன்….

“ஓகே ஆதி” என துள்ளலுடன் சென்றேன்…..

குளியலறையில் வெண்ணீரை நாடியே குளித்துக்கொண்டேன் காரணம் அங்கு அவ்வளவு குளிராய் இருந்தது….

குளித்து முடித்து சிவப்பு நிற சுடிதாரை அணிந்து கொண்டு வந்த என்னை ஆதி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்….

இம்முறை சொடக்கு போடுவது என் முறை ஆனது….

“என்ன ஆதி??

“ஒன்னுமில்ல அழகா இருக்குர….

“தேங்ஸ்

“சாப்புடுவோமா??

“ம்…பட் பில் நான் பே பன்னுரேன்

“நோ வே நீ என்னோட பொறுப்பு நான்தான் எல்லாம் பன்னுவேன்…

“பட் வை…??

“ரொம்ப யோசிச்சு இல்லாத மூளைய போட்டு படுத்தாத பக்கி

“பட் எல்லாத்துக்கும் கணக்கு வெச்சிக்கோங்க…

“ஓகே ஹனி…
என அவன் சிரித்துக்கொண்டே செல்ல அவனை ரசித்தவாறே நான் அவன் பின்னே சென்றேன்….

“இருவரும் சாப்பிட்டோம். ஒப்பிற்கு ஒன்று ரெண்டு விடயங்களை பேசினோம்….

பின்னர் செக்கவுட் செய்து விட்டு ஒரு டெக்ஸியில் ஏறினோம்….

அரைமணி நேரத்தின்  பின் அந்த இடம் வந்தது….
ஸ்னோ பொயின்ட்

என் உயிர் சுவாசிக்க மறந்து உறைந்து விட்டது யாரிவன் கடவுளா?
வான தூதனா??
என் கனவுகளை நிறைவேற்ற வந்தவன் என்று நினைத்தேன் ஆனால் இவனோ என்னை கனவுக்கு அப்பாற்பட்ட இடத்திற்கு அள்ளிச்செல்கிறானே……
மனம் அங்கலாய்க்க…
அவனை அணைத்து கொண்டேன்…..

“ஆதி அன் எக்சப்டட்….

“ஹனி கடைசி வரைக்கும் நான் நல்லவனா இருக்கனும்னு ஆசப்படுரேன்….
இப்புடி இன்ப அதிர்ச்சி தந்தா தங்கமாட்டேன்டி…..

“அவன் குரலின் கதகதப்பிலே என்னோட செய்கையை உணர்ந்து நாவை கடித்துக் கொண்டேன்….

“சொரி…..

அவன் நான் சொன்னதையே திரும்பிக் கூற நான் அவனுடன் சினுங்கிக்கொண்டே மல்லுக்கு நின்றேன்….

அந்த நொடி எனக்கு நானே புதிதாக தெரிந்தேன்…..

அங்கிருந்து என்னை  ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான்…..

அங்கு ஸ்னோ ஸுட் எடுத்து என்னிடம் தந்தான் ப்ளக் & வையிட் என்னோட அனைத்து ஆசைகளும் தெரிந்து வைத்திருந்தான் என்பது அந்த நிறத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டேன்…….

அதை அணிந்து கொண்டு நடந்தோம் பனிகளுக்கூடாக….

அன்று அவ்விடத்தில் திடீரென பனிமழை பொழிந்தது…..

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை ஆலங்கட்டிகள் என் மீது வந்து மோதியது. அதை கண்ணை மூடி அனுபவித்தேன்……

ஆனால் நேரம் ஆக ஆக எனது உடல் குளிரால் நடுங்க ஆரம்பித்தது….

எனது தேவையை அவன் எவ்வாறு அறிந்தானோ தெரியவில்லை என்னை அணைத்துக் கொண்டான்…….

அந்த குளிருக்கு அவனது அணைப்பு இதமாக இருந்தது….

“ஹனி வாடா போவம்….ரொம்ப குளிருது

“ப்ளிஸ் ஆதி இன்னும் கொஞ்சம் என பனிக்கட்டிகளை அள்ளி எறிந்து குழந்தை போல் விளையாடினான்
அவள் விளையாட்டில் அவனும் கலந்து கொண்டாள்…..

பின்னர் அவளை அழைத்துக்கொண்டு ஒரு டென்டிற்கு அழைத்துச் சென்றான்…….

அதில் இருந்தால் பனிமழைகள் நன்றாகவே தெரிந்தன….

அவள் அதை ரசித்து கொண்டிருந்தாள்…..

நேரம் நகர்ந்து இருளடைந்தது….


அப்போதுதான் ஆதியின் நினைவு வந்தது நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தான்….

அவன் அருகில் சென்றேன்

“பசிக்குதா ஹனி?
வெயிட் பன்னு நூடுல்ஸ் பன்னி தாரேன்

அவன் அன்பில் மெய்மறந்தேன். அப்பா அம்மா காதல் திருமணம் செய்து கொண்டாலும் அம்மாவின் தேவைகள் அப்பாவிற்கு புரிந்ததே இல்லை என அவள் பலமுறை எண்ணியுள்ளாள்…

ஆனால் இவனால் எந்த உறவும் இல்லாம என்னோட மனச எப்புடி படிக்க முடியுது? இந்த அர்த்த ராத்திரில நான் இவன் கூட எந்த நம்பிக்கைல தங்கி இருக்கேன்?!….

எதற்குமே விடையில்லை அதை யோசிக்க அவன் நேரம் தரவுமில்லை…

“இந்தா ஹனி என நீட்டியதை வாங்கிக்கொண்டேன்

அவனும் என்னருகில் அமர்ந்து சாப்பிட்டான்….

முடிந்ததும் அவன் என் முன்னால் அமர்ந்தான்….

“ஹனி என்னைய கல்யாணம் பன்னிக்குறியா??

“எனக்கு பொறை தட்டியது…..
அவசரமாக அருகிலிருந்த தண்ணீரை என்னிடம் நீட்டினான்….

“குடி ஹனி….

அதை வாங்கிக் குடித்தேன்

“இப்போ சொல்லு ஹனி

“என்னத்த சொல்ல ஆதி? நீங்க எப்படி இப்படி கேக்கலாம்? உங்ககூட வந்துட்டேன்னுரத்துக்காகவா?
நா என்னோட ட்ரீம்ம புல்பில் பண்ண மட்டும்தான் வந்தேன்…

“நல்லா பேசுர நான் என்னோட ஹனிக்கு பேசத்தெரியாதோன்னு நெனச்சேன் அவன் கண்ணில் ஒரு குறும்பு….
பட் ஹனி உன்னோட ட்ரீம்ம புல் பில் பன்ன யாரு கூப்டாலும் வந்திருப்பியா….?

நான் பதறிவிட்டேன் இவன் என்னை என்னவென்று நினைத்து விட்டான்..

“நான் தப்பா மீன் பன்னி கேக்கல ஹனி பட் எ…மேல இருந்த நம்பிக்கைலதானே வந்த…

“ம்….

“காதலுக்கு அடிப்படையே நம்பிக்கைதான் ஹனி

“பட் ஆதி அப்பா என்னைய ரொம்ப நம்புராரு. நான் இப்போ ஊருக்கு போனா கொன்னாலும் கொண்ணுடுவாரு….பட் அவரு என்னைய நம்பினா எனக்கு மாப்புள்ள தேடுவாரு…
என்னோட கனவு நெஜமாகிடுச்சு. அதுவும் உங்களால ரொம்ப தேங்ஸ் அதுக்காக எனக்கு என்னோட அப்பாட கனவ அழிக்க முடியாது……
அவர் பாக்குர பையனத்தான் நான் கட்டிக்குவேன் ஆதி

“எவனோ ஒருத்தன் வந்து பத்து நிமிசம் காபி சாப்புட்டுட்டு போயிடுவான் அவனுக்கு ஓகே சொல்லுவ
நான் நாள் பூரா உங்கூடவே இருக்கேன் எனக்கு நோ…..சொல்லுர
என்னைய புடிக்கலையா ஹனி?

“அவன் கண்ணில் அத்தனை ஏக்கம் அவன் போன்ற ஆண்மகனை யாருக்கு பிடிக்காமல் போகும்….
ஆனால் அவள் விதி

“என்ன ஹனி….அமைதியா இருக்க
புடிச்சிருக்கா இல்லையா அது மட்டும் சொல்லு

“புடிச்சிருக்கு ஆதி. ரொம்ப புடிச்சிருக்கு! எப்போ நான் வேணாம்ன்னு சொன்னப்போ நீங்க விலகுனீங்களோ அப்போல இருந்து புடிச்சிருக்கு….
இப்போ இந்த தனிமை, நீங்க-நான், இந்த குளிர்,நெருப்பு இதெல்லாம் ரொம்பவே புடிச்சிருக்கு! பட் இது காதலா இருக்க கூடாதுன்னு நெனக்கிறேன் ஆதி. காதலால என்னோட அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்போவரைக்கும் எனக்கு பாட்டி தாத்தா யாரையும் தெரியாது. அந்த நெலம என்னோட பசங்களுக்கு வரக்கூடாது ஆதி ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட்…..
ஐ ரியலி ரியலி மிஸ் யூ நாளைக்கு அப்ரம் நம்ம பாத்துப்போமான்னு கூட தெரில்ல….

“லவ் யூ ஹனி எனக்கு இது போதும் உனக்கு என்னைய புடிச்சிருக்கு இதுவே எனக்கு லைப்லோங் போதும்…..
இனி உன்னைய எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டேன். தூங்கு” என்றுவிட்டு கூலாக தூங்கிவிட்டான்….

என் மனமோ தூக்கமின்றி அலைக்கழிந்தது…..

அடுத்தநாள் விடிந்தது சூடான காபி கப்புடன் என்னருகில் இருந்தான் தினமும் இவ்வாறே விடியாதா என என் மனம் ஏங்கியது….

அங்கிருந்து கிளம்பினோம்…..

மீண்டும் அதே இடங்கள் ஆனால் எதிலும் கவனம் பதியவில்லை. கவனம் முழுதும் ஆதி மேல்தான்….
அவனும் எதுவும் பேசவில்லை

மீண்டும் சென்னை விமான நிலையம்
சென்னை வந்தவுடன்தான் பயம் என்னை தொற்றிக் கொண்டது அப்பா என்ன சொல்லுவாரு?? அம்மாவோட முகத்துல எப்புடி முழிப்பேன்??
இந்த சமூகம் என்ன சொல்லும்??
நான் எந்த தப்பும் பண்ணலன்னு சொன்னா ஒத்துக்குவாங்களா??
அப்ரம் ஆதி! இனி அவனோட இருக்க முடியாதா??
அவனோட நினைப்பே எனக்கு அதிக வலியை தரவும் அவனது கரங்களை இறுக பற்றிக்கொண்டேன்…

“என்னாச்சு ஹனி

“பயமாருக்கு ஆதி வீட்டுக்கு போக

“அப்போ என்கூட வாரியா??

“ம்ஹும்

“ஹஹா…

அவனது சிரிப்பு எனக்கு கோபத்தையே தந்தது. என்ன மாதிரி ஆள் இவன் நான் பிரிவது இவனுக்கு கவலை இல்லையா??

“மனசுக்குள்ள திட்டாத ஹனி….எல்லாம் சரியாகும் வா

“ஒருவேள பார்ட்டைம்மா சைக்கோலஜி செஞ்சிருப்பானோ??
என்று நினைத்துக்கொண்டே அவன் வண்டியின் அருகே வந்தேன்….

முன்பு போல் எந்த தயக்கமும் இல்ல…..

மெதுவாகவே ஓட்டுன்னு சொல்லி அவனை ஒட்டி அமர்ந்தேன்….

என்ன வேகத்தில் ஓடினாலும் அரைமணி நேரத்தில் வீடு வந்ததை என்னால் ஏற்க முடியவில்லை….

“ஹனி டோன்ட் பீல்
ஒன்னுமாகாது என்ன கஷ்டம்னாலும் மாமன நெனச்சிக்கோ சரியா
கந்தஷஷ்டி கவசம் போல மாமா பெயரையே சொல்லிக்கோ சரியா….

அவன் கூறிய தோரணையே என்னை சிரிக்க வைத்தது

“அப்பாடா சிரிச்சிட்ட இப்புடியோ போ…
என என்னை அனுப்பினான்….

அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன் கால்கள்  பிண்ணிக்கொண்டன அப்பா கூடத்தில் அமர்ந்திருந்தார்….

“பயத்தில் அவரை நிமிர்ந்து பார்த்தேன்….

“வாம்மா பயணம் எல்லாம் நல்லா இருந்திச்சா??

எனக்கு அதிர்ச்சி இது அப்பாவின் குணத்திற்கு மாற்றமான கேள்வி எங்கடி வந்தாய்ன்னு கேட்டால் கூட நான் அசந்திருக்க மாட்டேன் ஆனால் அவர் கேட்ட கேள்வியோ என்னை கலங்கடித்தது….

ஓடிச்சென்று அப்பாவின் காலில் விழுந்தேன்

“அப்பா அப்பா மன்னிச்சிடுங்கப்பா கோபம் அடிச்சிடுங்கப்பா நீங்க எந்த தண்டனை தந்தாலும் பரவால்லப்பா சொரிப்பா

“என்ன தண்டனை தந்தாலும் ஓகேவா??

“ம்….

அப்போ என்னோட வா என்று என்னை அழைத்துச்சென்றார் எதுவும் புரியாது அவருடன் சென்றேன்…

அது ஒரு திருமண மண்டபம்

“பா…..இங்க

“இதுதான் உனக்காக தண்டனை கல்யாணம் பன்னிக்குரியா

“கல்யாணம் என்ற வார்த்தை கேட்டதுமே என் கண் முன் ஆதி வந்து போனான்….

“என்னம்மா அமைதியா இருக்க என்ன சொன்னாலும் செய்வேன்னு சொன்ன…..

“செய்யுரேன்பா….
என் விழி முழுதும் கண்ணீர் மனம் முழுதும் ஆதி….
இருதலைக் கொள்ளியாய் தவித்துப்போனேன்…

யாராரோ வந்து அலங்காரம் செய்து விட்டனர் சித்தம் கலங்கியது போல் அமர்ந்திருந்தேன்

யாரோ இருவர் வந்து அழைத்து மனவறைக்கு கூட்டிச் சென்றனர்….

சினிமால வார மாதிரி ஆதி வந்து நிறுத்துங்கன்னு சொல்ல மாட்டானான்னு மனசு சொல்லிட்டே இருந்திச்சி…
ஆனா சினிமால நடக்குர மாதிரி வாழ்க்கைல நடக்காதே….

மணவறையில் அமர்ந்தேன் ஐந்து நிமிடத்தில் அடுத்தவன் பொண்டாட்டி என நினைக்கும் போதே என் கண்ணில் கண்ணீர் நிற்காது வழிந்தது….

ஆனால் காதில் கதகதப்பு

” ஹனி அழாத மேக்கப் எல்லாம் கலஞ்சிடும் பொண்டாட்டி

“ஆதி
என திரும்பி பார்த்தேன் அவனேதான் ஆதி என்னோட ஆதி என்னோட மனசுக்கு வந்த சந்தோஷத்த சொல்ல அகத்தியரால கூட வார்த்தை கண்டுபிடிக்க முடியாது…..

கண்ணீர் ஆனந்த கண்ணீராய் மாற ஆதியை பார்த்தேன் அவன் என் கழுத்தில் மாங்கல்ய நாண் பூட்டினான்…..

“யெஸ் ஹனி ஆதி யுவர் ஆதி…
ஆர் யூ ஹேப்பி…..

“ரொம்ப ரொம்ப என அவன் கைகளை பிடித்துக் கொண்டேன்….

பின்பு சில சடங்குகள் முடித்து ஆதியின் வீட்டிற்கு சென்றேன்

முதலிரவு
ஆதியின் அறைக்கு தயங்கி தயங்கி சென்றேன்….

அங்கு அவன் நின்றிருந்தான் அதே புன்னகையுடன்

சில வேளைகளில் எமது வாழ்க்கையும் சினிமா மாதிரித்தான் என நினைத்து என்னுள்ளே சிரித்துக் கொண்டேன்…..

ஆதி என்னை அமர வைத்தான்..

“ஹனி ஒன்னோட மனசுல நெரய குழப்பம் இருக்கு அதுக்கு நானே பதில் சொல்லுரன்

உன்னைய பாத்ததுமே புடிச்சி போச்சி அப்ரம் உன்னைய பத்தி டீடெயில் கலெக்ட் பன்னினேன் அந்த டைமே மனசுக்கு தோனிச்சி இவள் கேக்காமலே இவளோட ஆசைகள நிறைவேத்தனும்னு…

அப்ரம்தான் உங்கிட்ட பிரபோஸ் பன்னினேன் பட் நீ ரிஜெக்ட் பன்னிட்ட நீ ஏன் ரிஜெக்ட் பன்னுர உனக்கு ஏன் லவ் புடிக்கலன்னு தெரியும் நீ ரிஜெக்ட் பன்னினதுல இருந்து நான் கடுமையா உழைச்சேன் பட் நீ என்னைய தேடினத பாத்துட்டுதான் இருந்தேன் நீயா வந்து பேசமாட்டாய்ன்னு தெரியும்…..

அதுதான் உன்னோட அப்பாகிட்ட போய் பேசினேன் உன்னோட ட்ரீம்மையும் சொன்னேன்….
நீ வருவாய்ன்னு நம்பிக்கை இருந்திச்சி நீயும் வந்தாய்….
உன்னோட காதலும் கெடச்சது….
உனக்கு சர்ப்ரைஸ்தான் இந்த கல்யாணம் உனக்கு இங்க எல்லா உறவுகளும் கிடைக்கும்…..
ஆர் யூ ஹேப்பி பேபீ….?


எனக்கு வார்த்தைகள் வரவில்லை ஆதியை இறுக அணைத்து கொண்டேன்…..

“லவ் யூ ஹனி

“லவ் யூ டூ ஆதி மனாலி மட்டும்தான் என்னோட கனவா இருந்திச்சி என்னோட கனவுப்பயனத்துலயே என்னோட வாழ்க்கையே கிடைக்கும்ன்னு நெனக்கவே இல்ல…
எப்போவுமே அந்த பயணத்தை என்னோட வாழ்க்கைல மறக்க மாட்டேன்…

“நானும்தான் ஹனி

இப்போவாச்சும் பெயர் சொல்லுங்க ரீடர்ஸ் பாவம்….

“ஹஹா இவள் ஆரண்யா இந்த ஆதியின் ஆரண்யா..

அப்புரம் என்னங்க எங்கட வாழ்க்கை ஆரம்பமாச்சி என்னோட ஆதி எனக்கு இந்த உலகத்தையே சுத்தி காட்டினான்….

ஆனாலும் வருடந்தோறும் மனாலிக்கு போய்டுவோம்…..

இதுதாங்க என்னோட வாழ்க்கையோட முதலும்,சிறந்ததுமான பயணம்….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க