என்னடா உலகமிது?

0
524
FB_IMG_1605762911045-55ce62bb

என்னடா உலகமிது…?

மருத் தெருவில் பூங்காடும்
கருச் சிறையில் வெறும்கூடும்
பிரசவிக்கும் காலமிதோ?
ஒரு குருவி பாடுது!

பூனை தேடும் கருவாடும்
கைநழுவி மனம்வாடும்
என்று ஓலமிட்டேதான்
பெண் யானை பிளிரிது!

தொட்டணைக்கும் சுகத்தோடும்
கையிரண்டை கட்டிப்போடும்
காலம் வரும் வரை
சிங்கம் விரதமிருக்குது!

காதணியும் தங்கத்தோடும்
கடைசிவரை யிருக்கும் கல்வீடும்
வேண்டுமென்று தானோ
காக்கை அடம்பிடிக்குது!

காலம் என்ன மாயம்
மாயம் செய்யும் கோலம்
என்று கவிதை பாடி
மயிலும் தோகை விரிக்குது!

என்னடா உலகமிது…?

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க