உன் உயிர் பிரியும் அந்த நொடி

0
1739
20201210_120137-690d4d6a

அந்த உயிர் பிரியும்
நொடி என் விழியோரத்தில் நீர்
துளிகள் நதியாய் போல்
வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.

வலிகளை தாங்க இயலவில்லை
இதயம் வெடித்து விடுவது போல்
உணர்வு.

கலங்கிய கண்கலோடு
நீ பிரிந்த அந்த இடத்தை
பார்த்து கதறிக் கொண்டு
இருக்கிறேன்.

உன்னை பிரிந்து என்னால்
மறக்க முடியாத வலி தான்
உன் நினைவுகளை எண்ணி
என் மீதி வாழ்க்கையை வாழலாம்
என்று நினைக்கிறேன்.

ஆனால் அதற்கும் வழி
இல்லை ஏனென்றால்
நீ இல்லாத வாழ்க்கையை
என்னால் நினைத்தும் பார்க்க இயலவில்லை.
நானும் நீ போன இடத்திற்கே
வருவோம் என்று நினைத்தேன்
ஆனால் அது மிகப் பெரிய தவறு
என்று நினைத்து அதை கைவிட்டேன்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க