உத்தம ஆசான்…

0
1080
Written in Tiles on Wooden Surface

 

 

 

 

அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,
அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,
எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,
ஏட்டை உழுது புலமை விதைத்து,

புத்தக ஒளியால் புத்துயிர் ஊட்டி,
புதுயுகம் படைத்திட வழித்துணை வந்தவர்,
ஏற்றம் கண்டிட ஏணியாய் நின்றவர்,
என்றும் நிறைந்த அனுபவக் கூடங்கள்,

வித்தைகள் கொண்டு மனங்களை அளந்து,
விபரணம் தந்து வினைகளை களைபவர்,
மாணவ நிலையை மகிழ்வுறக் கடந்திட,
மாண்புகள் காட்டி நெகிழ்வுறச் செய்தவர்,

கலையும் கணிதமும் கரும்பெனக் கற்று,
கண்ணியம் கடமை நேர்மை காத்திட,
பொய்மை ஒழிந்து பொறுமை ஓங்க,
பொன்மொழி புகட்டிய பொன்மனச் செம்மல்,

உண்மை நெறியும் உலகோர் வாழ்வும்,
உணர வைத்திடும் ஒளியின் விளக்கே,
வரவை அறிந்து வாழ்த்து சொல்லும்,
வரமாய் இறைவன் கொடுத்த கொடையாளர்,

மாதா பிதாவின் மகத்துவம் கண்டவர்,
குருவின் நிழலில் குற்றம் தொலைப்பார்,
உன்னத சேவை உலகிற்கே வழங்கிடும்,
உள்ளத்தால் உயர்ந்த உத்தமர் அவரே….

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments