ஈச்ச மரம்

0
4872

ஈச்ச மரம்  என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு  பனைக் குடும்ப தாவரமாகும். இவை பெரும்பாலும் தெற்கு பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், வங்கதேசம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேலும்  மொரிசியசு, சாகோஸ் அரிப்பிளாகோ, புவேர்ட்டோ ரிக்கோ, லீவர்டு தீவுகள் ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. இவை  1300 மீட்ர் உயரம்வரை சமவெளிகளில் வளரக்கூடியவை. இதன் பழங்கள் மூலமாக ஒயின், ஜெல்லி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த மரங்களிள் இருந்து கள், பதநீர் ஆகியவை இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இறக்கப்படுகின்றன. வெல்லமும் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஓலைகளைக் கொண்டு பை, பாய், துடப்பம் ஆகியவை செய்யப்படுகின்றன.

இந்த மரங்களில் ஆண் மரங்கள், பெண் மரங்கள் என உண்டு பெண் மரங்களில் மட்டும் பழங்கள் உருவாகும், ஆண் மரங்களில் பழங்கள் உண்டாகாது. இந்த மரத்தை இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் வால் இந்தியா என அழைக்கின்றனர்.

இம்மரங்கள் 4 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன. மரத்தின் விட்டம் 40 செ.மீ வரை இருக்கும். இதன் ஓலை மட்டை மூன்று மீட்டர் வரை நீளம் கொண்டு சற்றே வளைந்தவாறு இருக்கும். இதன் மட்டையிலும் இலைகளின் முனையிலும் முட்கள் கொண்டிருக்கும்.

இந்த மரங்களில் ஆண்மரங்கள் உண்டு ஆண்மரங்கள் மஞ்சள் கலந்த வெண்மையாக பூக்கள் பூக்கக்கூடியன. இதன் காய்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும் பழுக்க ஆரம்பித்த பிறகு சிவப்பு வண்ணமடைந்து இறுதியில் பழுப்பு நிறத்தை அடையும். இதன் பழங்கள் உண்ணத்தக்கது.

  • நம் நாட்டு ஈச்ச மரங்களை “சிற்றீச்சம்” என்று சொல்வர்.
Phoenix sylvestris

காய்கள் சிறியவைகளாகவும் சற்று நீண்ட வடிவைப் பெற்றவையாகவும் இருக்கும். சிற்றீச்சங்காய்கள் கொத்துக் கொத்தாக பசுமை நிறத்துடன் காணப்படும். பழுத்த நிலையில் சிறிது சிவப்பான நிறத்துடன் காணப்படும். சிற்றீச்சையின் பச்சைக்காய்கள் சற்று புளிப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் கொண்டதாக இருக்கும். பழுத்த நிலையில் இனிப்புச் சுவையோடு சற்று புளிப்புச் சுவையும் பெற்றிருக்கும். பழம் தின்பதற்கு உதவும் என்றாலும் பேரீச்சையைப் போல தினமும் உணவுப் பொருளாக உபயோகப்படுத்துவதற்கு உகந்தது அல்ல.

சிற்றீச்சையின் பழங்கள் உடலுக்கு உரந்தரக் கூடியது என்றாலும் அளவோடு சாப்பிடக் கூடியது. சிற்றீச்சைச் சாறு குளிர்ச்சி தரவல்லது. பசியைத் தூண்டக் கூடியது. விதைகள் வியர்வையைத் தூண்டக் கூடியது. வேர்ப்பகுதி நரம்புக் கோளாறுகளை நீக்கவல்லது. ஈச்சங் குருத்தைக் கீறி அதினின்று வடியும் சாற்றைப் பானைகளில் சேமித்துப் புளிக்குமுன் அதை பதநீராகப் பருகுவது பண்டைய வழக்கம்.

பயன்கள்
  • சிற்றீச்சைச் சாறு குளிர்ச்சி தரவல்லது.
  • விதைகள் வியர்வையைத் தூண்டக் கூடியது.
  • வேர்ப்பகுதி நரம்புக் கோளாறுகளை நீக்கவல்லது.
  • ஈச்சங் குருத்தைக் கீறி அதினின்று வடியும் சாற்றைப் பானைகளில் சேமித்துப் புளிக்குமுன் அதை பதநீராகப் பருகுவது பண்டைய வழக்கம்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க