இரவின் உளறல்கள்…

0
1237
அமைதி மட்டும்
ஆளுகின்ற
அந்த நெடு இரவில்
ஆழ்ந்த சிந்தனை…
 
தொலை நிலவோடு
தொலைந்து போன
நெடுந்தூர கனவை
நினைத்து வருந்தும் 
நிலமை அங்கே…
 
காலச் சூழ்நிலைக்குள்
கட்டுப்பட்ட
கைதியாய் போன
கருங் காலம்…
 
வேஷம் போட்டு
காரியம் சாதிக்கும் 
கழி காலம்…
 
உண்மையாய் வாழ
ஒரு வழி கூட 
இல்லாமல் 
உறுதியற்ற 
உலகம்…
 
பெண் பிறவியில்
கண்ணீர் மட்டும்
கலவையாய்
போன காலம்…
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க