இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 01)

1
6087
 *பகுதி 01* 
 
ஊர்சனத்தின் ஓசையினை அடக்கிய மார்கழி மாத மழையோ இன்னும் தன்னோசையை நிறுத்தவே இல்லை. அன்றய தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு படுக்கையறைக்குச் சென்றாள் பவித்ரா.
 
 அங்கு தன் கணவன் கூறிய கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவாறதூங்கிய மகனையும் கதை சொன்ன களைப்பில் குறட்டை விடாத குறையாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தனது கணவனையும் ஒரு நொடி பார்த்து ரசித்த அவள் பின் அவர்கள் தூக்கம் கெட்டுவிடக் கூடாது என்று மெல்லவே கணவனின் மார்பின் மீது தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை அள்ளியெடுத்து அக்கட்டிலில் அவனுக்குரிய இடத்தில் தூங்க வைத்துவிட்டு அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.[ அவர்கள் வீட்டில் கட்டிலின் முதற்பகுதியில் தூங்குவது ராஜா அதாவது பவித்ராவின் செல்லமகன். அதன் பின்னுள்ளது அவன் தந்தையினுடையது. அதன் பின்னுள்ளது பவிதத்ராவின் பகுதி. இது இவர்களின் வீட்டு இளவரசனான ராஜாவின் எழுதப்படாத சட்டமாம்.] 
 
அதனால் அவர்கள் வீட்டுச்சட்டத்தின் படியே அவளும் தனது இத்டதிற்கு தனது போர்வையை எடுத்துக் கொண்டு உறங்குவதற்காகச் சென்றாள். எனினும் இன்று வழமைக்கு மாறாக காணப்பட்ட அதிக வேலையினால் ஏற்பட்டிருந்த களைப்போ!  அல்லது மார்கழி மாத மயக்கமோ!  அவளுக்கு தூக்கத்தைத் தர வில்லை. நாளைய நாள் எப்படி அமையப் போகின்றது?  அதன் முடிவு என்னவாக இருக்கும்?  அது என் குடும்பத்தின் விடியலுக்கான அஸ்திவாரமாக இருக்குமா?  என்ற பல கேள்விகளுடன் சிந்தனையில் மூழ்கியிருந்தாள். 
 
பலமாக அடித்த  காற்றினால் வீசி எறியப்பட் மழைத்தூறல்கள் அவர்களின் வீட்டில் உள்ள நெட்டுக் கம்பிகள் வழியே புகுந்து ராஜேஷின் நெற்றியில் பட்டுத் தெறிக்க தூக்கத்திலிருந்து விழித்தான் ராஜேஷ். [ இந்த ராஜேஷ் யாரு என்டு பாக்குறிங்களா? அவரு தான் நம்ம ஹீரோ பவித்ராவின் கணவன். சரி பவித்ரா ஏன் இப்படி யோசிச்சிட்டு இருக்கா? அத பார்த்த கணவன் என்ன சொல்லப் போறான்?  அவர்களுக்கு நாளை அப்படி என்ன நடக்கப் போகின்றது?  வாங்க பார்ப்போம்.  ] 
 
தொடரும்…
முந்தைய கட்டுரைஇள வயதுக் கூன்
அடுத்த கட்டுரைநம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…
User Avatar
எனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Grecys
Grecys
5 years ago

(y)… When can we get next part?