அவள்

0
1193

காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா?

காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற?

குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா பாத்துக்க மாட்டியா?

பகல் சாப்பாட்டுல கொஞ்சம் ஏதோ மிஸ்ஸிங், ஒரு சாப்பாட்ட கூட செய்யத்தெரியுதா?

ஆடை கழுவியதில் ஒரு சிறு மஞ்சள் போகவில்லை, என்னடி இது என எரிச்சல்?

உடைகளை அயன் செய்ய மறந்துவிட்டாள், உனக்கு இது கூட ஞாபகம் இல்லயா?

வீடு சுத்தம் செய்ய நேரமாகிவிட்டது, எல்லாம் கண்ட படி போட்டிருக்கியேடி?

அசதியில் தூங்கி விட்டாள் கொஞ்சம், பாரு நானே செய்யனும் எல்லாம் உனக்கு ஒரே தூக்கம்?

குழந்தை தப்பு செய்து விட்டது? புள்ளயா வளர்த்திருக்காய்?

ரிங் அடிச்சதும் போன் ஆன்ஸர் இல்ல, அப்டி என்ன வேலை உனக்கு?

இப்படி எதற்கெடுத்தாலும் அவள் மேல் கோவம், எரிச்சல், முகம் சுளிப்பு, எவ்வளவு காயப்பட்டிருப்பாள் மனைவி? ஆண்களின் கோபங்களை இறக்கி வைக்கும் இயந்திரம் அல்ல அவள்…. நமக்காக இயந்திரம் போல் உழைப்பவள், இவ்வளவையும் கேட்டு விட்டு அவள் நமக்கெதிராக பயன்படுத்தும் ஒரே ஆயுதம்…அழுகை

இப்படியெல்லாம் காயப்பட்டவள்தான் கணவனுக்கு நோய் என்றதும் பதறிப் போகிறாள், அவன் மூலம் உருவான குழந்தையை நெஞ்சில் சுமக்கிறாள், தனக்கான அத்தனை சுதந்திரத்தையும் விட்டு குடும்பமே உலகம் என்று வாழ்கிறாள், சோர்வான நேரங்களில் கூட தனது பணிகளுக்கு ஓய்வு கொடுக்க முடிவதில்லை அவளால், இப்படி தன்னையே இழந்து உனக்காக வாழும் அவள் உன்னிடம் எதிர் பார்த்து நிற்பது உன் மாசற்ற அன்புக்காகவும், அன்பான வார்த்தைக்காவும் தான்…

அன்பை மட்டும் அவளிடம் தூவுங்கள் 💝💝
அவள் உணர்வுகளையும் கொஞ்சம் மதியுங்கள் 💝💝💝 
அவளே வாழ்வின் நிரந்தர காதலி 💝💝💝

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க