அவள்

0
1112

அந்த கடவுள் 
உலகிற்காக
தந்த வரமாய் 
அவள் 

குழந்தையாக பிறந்து , 
சிறுமியாக வளர்ந்து ,
அற்புதமான மகளாய் 
தந்தைக்காக எழுந்து , 
கசக்காத உறவாய் 
சகோதரங்களுடன் 
நகர்ந்து….
இளையவளுக்கு
இன்பமுமூட்டி
அதிகாரம் இல்லா
தமக்கையாயும் 
கொஞ்சம் கொஞ்சி 

நாட்கள் கொஞ்சம் 
கடக்க நல்
மாணவியாக ,
அங்கே பலருக்கு 
தோழ் கொடுக்கும் 
உற்ற தோழியாக , 
மெல்ல உலகத்தை 
அறியும் வயதில் 
பெண்ணாக 

வேலை என்று 
சென்ற போதிலே 
அனைத்தையும் நல்
முகாமை செய்பவளாக

அவன் கை 
பிடிக்கும் போதிலே
அழகான
மணமகளாக ,
அவன் உணர்வுகளில்
மெல்ல கரையும்
நல்ல மனைவியாக,
அழகான குரலில்
அவனுக்கு பாடகியாக,
அதட்டலான குரலில் 
கொஞ்சம் அதிகாரியாகி,
காலம் கடக்க மெல்ல
கற்பிணியாக ,
சொந்தம் ஒன்று 
பெற்றிருக்க 
அம்மாவாகவும்

அந்த சொந்தத்திற்கு
ஆசானாக,
அனைத்தையும் 
சொல்லிக் கொடுக்கும்
நல்ல நண்பியாக ,
ஆசைகளை நிறைவேற்றும் 
அழகியாக ,
நேசங்களை நிறைத்து 
வைக்கும் 
அன்பு பெட்டகமாக 

நீ தவளும் வயது 
தொடங்கி,
தள்ளாடும் வயது வரை,
அனைத்து உணர்ந்தவள்
அவள்

வேதனை அனைத்தும்
சாதனையாக்கபடுவது
அவளிடத்தில்

போதனை கேட்பதை
புறக்கணிப்பதும்
அவளிடத்திலேயே 

துளிர் விடும் அவள் 
நேசம் அத்தனை 
அழகானது

அன்புக்காய் ஏங்கும் 
அதிக பிரயத்தனங்களும் 
அவள்

கண்ணீருக்கு 
பிடித்த கவிதையும் 
அவள் 

சொல்லப்படாத 
சோகங்கள் கொண்ட
புதிர்களாய்…
செல்ல மொழி 
கேட்கும் 
செவிகளாய்

சம்பளமே 
இல்லாமல், 
இன்றும் இப்பொழுதும் 
உங்கள் ஒவ்வொருவரிலும்
அன்பை விதைத்து 
கொண்டு இருக்கும் 
அழகி அவள் 

அன்புடன் அவளை 
கொஞ்சம் 
கொண்டாடிடுங்கள்,
அவளோடு 
விளையாடுங்கள்,
ஆசையாய் 
அவள் கதைகள் 
கேட்டிடுங்கள்
நேச மொழி 
தொடுத்து பேசிடுங்கள்

நீங்கள் சேர்க்க மறக்கின்ற
அழகிய சொத்து அவள்…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க