அவள் இவளில்லை…

0
68
d295f43b9ac4d21a02df4e1a481778ad-ac45d0df

 

 

 

நீண்ட நாட்களுக்குப் பின்…
அன்று கண்ட அதே முகம்
ஆனால் அவள் இன்று
அவளில்லை…

அவளின் வருகையால்,
மேகங்கள் கூடி
நடனங்கள் ஆடின

விண்மீன்கள் வானை
தோரணமாய் மூடின

வெட்கத்தால் தாழ்ந்து
வெண்ணிலாக்களும் ஓடின

விரும்பியோ விரும்பாமலோ
மின்னல்களும் பாடின

அவள் மூச்சுக்காற்று
ஜன்னல் கம்பிகளை வந்து தீண்ட
ஜன்னல்கள் வெட்கத்தால் சுவரின் மேல்
தன்னை உரசிக்கொண்டன

அவள் பாதம் பாதையில் பதிந்தும்
வீதியோர மின்விளக்குகள் கூட
விட்டு விட்டு கண் சிமிட்டிக்கொண்டன

அவளின் வருகையை
ஒட்டுமொத்த நிகழ்வுகளும்
விழாக்கோலமாய் கொண்டாடின…

எனினும் ஏனோ???
எனக்கவ்வாறில்லை…
நானன்று கண்டவள் அவளில்லையே…

நானன்று கண்டு அவளோ!
ஓரக்கண்களால்
ஒட்டுமொத்த காதலையும்
சிந்த விட்டு என்மேல்
தினித்தவள்

ஆனால் இவளோ!
என்னை உதறிப் புறந்தள்ளிவிட்டு
வேறொருத்தனைக் கரம்பிடிக்கச்
சென்றவள்…

 

 

 

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க