அவலம்

1
1723

 

 

 

 

வார்த்தைகள் கொட்ட
உள்ளம் கலங்கியதோ
மோதல்கள் உருவெடுத்து
பிரிவு ஆட்கொண்டதோ
துயர் கண்டு நீயும்
துடித்து போனாயோ
தீராதா அன்பில் நீ
உரைந்து விட்டாயோ
கூடல் இன்பம் உன்னை
துன்புறுத்துதோ
இனிக்க இனிக்க பேசிய
நினைவுகள் வாட்டுதோ
நம்பியதால் துரோகம்
செய்தனரோ
பாசம் கொண்டு பாசாங்கு செய்தனரோ
வேதங்கள் அக்கியில்
மறைய உன் உள்ளத்தீ
மட்டும் தனலாய் ஏறிய
அம்பு எய்தவன் எவனோ
காலங்கள் கடந்தும்
நேசங்கள் நெஞ்சை
விட்டு அகலாதோ
நீ பட்ட வேதனையெல்லாம்
சகித்து கொண்டு
வாழ பழகி விட்டாயொ
முகம் முன் இன்பமாய்
பேசி சிரித்து போகும்
வஞ்சவர் உன்னை இகழ
மறு மொழி பேச
வழியின்றி
மெளனமாய் இருந்து
விட்டாயொ சூழ்ச்சிகள் இதுதானென்று அறியாமலோ
வலையில் மானாக
அல்லலுற்றாயொ
போதும் நீ துயரினுள் புதைந்தது
உன் வாழ்க்கையை நீ வாழ்ந்திடு
இதுதான் வாழ்க்கை விதி அறிந்திடு
துன்பங்கள் விலக்கிடு….

 

 

 

 

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌