அன்பெனும் மழையிலே

0
790
01dd8ad0481f64dfc8964451107a64ad

 

 

 

 

மழைபொழியா பூமி
தன் உள்ளிருப்புக்களில்
வெறுமைபூண்டு
வெடித்துச் சிதறுவது போல்
அன்புக்கு ஏங்குது
ஆழ்மனது…

பருவத்து மாற்றங்களால்
தொலைந்துபோன
அன்பின் வார்த்தைகளை
எண்ணி நொந்து கொள்ளும்
நானொரு
அன்பின் அநாதை….

கேளாமல்
என் சோகங்களை
கடன் வாங்கும்
கள்ளமில்லா
ஒரு வெள்ளை மனத்தின்
உயிர் சிலிர்க்கும்
உன்னத அன்பில்

கண்ணீர்ச் சுவடுகள்
கறையின்றி
கரைத்துச் செல்லும்
எனக்கே எனக்கான
அந்த
அன்பிபெனும் மழையினில்
அசராது , தவம் இருப்பேன்!!!

என்
சந்தோசத்தின் வருகையை
வரவேற்ற படி….!!

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க