அன்பு அநாதை இல்லைங்க

0
1106

“உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்”
எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு இல்லண்ணா மூடிற்று உன்ர வேலையப்பார் அன்புஅனாதைதான்) இப்பிடி தானே சொல்லப்போறியள்.இத வாசிச்சு முடிக்கும் வரைக்கும் அப்பிடியே வைச்சுக்கலாம்……

அன்போ காதலோ யார் மேல வேணும்னாலும் காட்டிரலாம்.ஆனா அந்த பொல்லாத கோபத்த நமக்கு ரொம்ப பிடிச்சவங்கள்ட்ட மட்டும் தான் காட்டமுடியும்.பிடிச்சவங்களுட்ட கோபத்த காட்டினா அன்பா? எண்டு கூட உங்களுக்கு தோணலாம்.அது என்னவோ உண்மதாங்க.உண்மையான அன்பு இருந்தா மட்டும் தான் உரிமையோடகோபம் வரும்.இல்லண்டா எந்த நாய் எப்பிடி போன நமக்கென்ன எண்டு போயிட்டே இருப்பமா இல்லையா?அதுதாங்க மேட்டரே .உண்மையான அன்பு இருக்கிறப்ப கொஞ்சம் கூடவே உரிமையும் எடுத்துக்கிறம்,,,கோபமும் வருது,,,,வார்த்தை நீளுது,,,வலிகளும் கூடுது….

என்னங்க உங்க வழிக்கே வந்திற்றன் எண்டு தானே நினைக்கிறிங்க.மிச்சத்தையும் கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாமே.. அன்பு வைச்சா ரொம்பத்தான் வலிக்கும் ஆனாலும் அந்த வலியிலையும் நமக்கு பிடிச்சவங்கூட பேசனும் எண்டு மனசு சொல்லும்.யாராவது ஆறுதல் சொல்லமாட்டங்களா எண்டு ஏங்குவம்.சில நேரங்கள்ள செத்திருவமா எண்டு கூட யோசிப்பம்.ஆனாலும் உயிரவிடவே மாட்டம் .ஏன்னா நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டுட்டு இருக்கமாட்டாங்க என்ரதில முழுநம்பிக்கையோடஇருப்பம். ரெண்டே நாள்ள எல்லாத்தையும் மறந்திட்டு பழையபடி நம்ப அன்ப பொழிஞ்சிருவம்.இப்ப சொல்லுங்க உண்மையான அன்பு அனாதைதானா?இல்லவே இல்லைங்க அந்த அன்புதான் இன்னைக்கு எத்தனையோ பேர வாழ வைக்குது.ஏன் என்னையும் கூட…இப்ப கூட இவளவு சப்ப மேட்டர சொல்லுறாளே என்டு என்னில உங்களுக்குவாற கோபம் கூட அன்புதாங்க.கொஞ்சமா யோசிச்சுபாருங்க ..பிறந்ததில இருந்து நமக்காக மட்டுமே வாழ்ந்திட்டு இருக்கம்.எனியாவது அன்ப தாராளமா குடுத்து நமக்குபிடிச்சவங்கட சந்தோசத்துக்காக வாழலாமே…….

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க