அன்புள்ள அன்னைக்கு

0
569
IMG-20200801-WA0024

 

 

 

 

பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது

உறவுகள் இன்றி ஏங்கிய நாட்களில் உன் உறவையும் விட்டு எங்களுக்காகவே உறவாகினாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது

தந்தையின் பாசம் கிடைக்காத போது நீ தாயாக மட்டுமில்லாமல் தந்தையாகவும் ஒரு பாசத்தை காட்டினாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது

நான் வலியில் கதறிய நாட்களில் தாயென மறந்து தோழியாக மாறி தோள் கொடுத்தாயே உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது

உன்னை விட்டு நான் போவதாக இருந்தால் பிணமாகவே போவேனே தவிர என்றும் உன் அருகில்தான் என் சுவாசக் காற்று நீதானே அம்மா

எத்தனை உறவுகள் அருகில் இருந்தாலும் உன் தாய்மைக்கு ஈடாகாது அம்மா நீயே என் உலகம்🥺

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க