ஃபீனிக்ஸ் (Phoenix)

0
1676

 

 

 

 

எகிப்திய, கிரேக்க ரொமானிய தொன்மவியலில் குறிப்பிட்டிருக்கும் தானே தீக்குளித்து பின்னர் தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் தீப்பறவையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஃபீனிக்ஸ் பறவை . மறுபிறப்பின் அம்சமாக கருதப்படும் அழிவில்லா இப்பறவை சிவந்த உடலும் பொன்னிறச்சிறகுகளும் கொண்ட பெரிய கழுகைப்போன்ற தோற்றமுடையது. நெருப்பின் நிறத்தில் சிவப்பாகவே இப்பறவை எப்போதும் சித்தரிக்கப்படுகின்றது. Phoenix என்னும் சொல்லின் வேர் லத்தீன் கிரேக்க மொழியில் பனை மரத்தை குறிப்பதாகும். இப்பறவை பனைமரத்தில் இலவங்கப்பட்டையால் கூடுகட்டி வாழ்ந்ததாக தொன்மங்கள் உள்ளன.

இலக்கியங்களில் இறவாமையை குறிக்கப்பயன்படுத்தப்படும் குறியீடாக இப்பறவை இருக்கின்றது.
பீனிக்ஸ் பறவைகள் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்தன என்றும் சில புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மற்ற பறவைகள் விதைகள், கனிகளை, பூச்சிகளை உண்ணுவது போல் இல்லாமல் ஃபீனிக்ஸ் பறவை அமோமம் (ஓர் வகை இஞ்சி) எனப்படும் மணமுள்ள பிசினையே உணவாக எடுத்துக்கொள்ளும் என சொல்லப்படுகின்றது.

அரேபியப்பறவை என்றும் அழைக்கப்படும் ஃபீனிக்ஸ் பற்றி ஒப்புமைகள்.

இந்து புராணங்களில் கருடனாகவும், ஜார்ஜியாவில் பாஸ்குஞ்சியாகவும், அரேபியாவில் அங்காவெனவும், பாரசிகத்தில் சிமோர்ஜ் ஆகவும் இருக்கின்றது. சிரியாவைச் சேர்ந்த கவிஞர் அடோனிஸ் என்பவர் எழுதிய The Myth of eternal return of the Phoenix என்ற நூலில் இப்பறவையைக் குறித்த ஏரளமான தகவல்கள் உள்ளன.

எகிப்தியர்களால் இப்பறவை வணங்கப்பட்டது. எகிப்தின் சூரியகோவில்களில் இப்பறவையின் சிலை எப்போதும் இருக்கும். எப்போதும் தரையைத்தொடாமல் பறந்தபடியே இருக்கும் மரணமே இல்லாத இப்பறவையாகவே இது அறியபட்டிருக்கின்றது. இப்பறவையை குறித்த ஏராளமான கதைகள் எல்லா தொன்மங்களிலும்உள்ளன. கற்பனைப் பறவையென்றாலும் மிக சுவாரஸ்யமான பறவை இது.

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க